India

பாஸ்போர்ட் சரிபார்ப்புக்காக காவல் நிலையம் சென்ற பெண்ணுக்கு நடந்த கொடூரம் : உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!

உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தர் இஷ்ரத். இவர் தனது மகனுடன் பாஸ்போர்ட் சரிபார்ப்பதற்காக அலிகாரில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்றுள்ளார். அப்போது ஒரு போலிஸ் அதிகாரி மனோஜ் சர்மா என்ற மற்றொரு அதிகாரியிடம் துப்பாக்கி ஒன்றைக் கொடுத்துள்ளார்.

இந்த துப்பாக்கியை மனோஜ் சர்மா சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக துப்பாக்கியில் இருந்து குண்டு வெளிவந்து ங்கு இருந்த குஷ்ரத் மீது பாய்ந்துள்ளது.இதில் அப்பெண் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளார்.

உடனே போலிஸார் அவரை அருகே இருந்த ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். அங்கு அவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இதையடுத்து, அலட்சியமாகச் செயல்பட்ட காவலர் மனோஜ் சர்மா மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேநேரம் பாஸ்போர்ட் சரிபார்க்கப் பணம் கேட்டதால் ஏற்பட்ட பிரச்சனையிலேயே இஷ்ரத் மீது போலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

Also Read: ஒன்றரை வருடமாக செயல்பட்டு வந்த போலி சுங்கச்சாவடி : பா.ஜ.க ஆட்சி செய்யும் மாநிலத்தில் நடந்த நூதன மோசடி!