India
மயக்க ஊசி போட்டு மருத்துவ மாணவி தற்கொலை.. கைது செய்யப்பட்ட சீனியர் மருத்துவர்.. - பின்னணி என்ன ?
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் அமைந்துள்ளது வெஞ்ஞாறமூடு என்ற பகுதி. இங்கு ஷகானா (26). இவர் அங்குள்ள அரசு மருத்துவ கல்லூரியில் அறுவை சிகிச்சை பிரிவில் முதுகலை படித்து வந்துள்ளார். இந்த சூழலில் இவர் அதே கல்லூரியில் படிக்கும் கொல்லம் கருநாகப்பள்ளி என்ற பகுதியை சேர்ந்த ரூவைஸ் என்ற சீனியர் மாணவரும் காதலித்து வந்துள்ளனர்.
இந்த சூழலில் இவர்கள் காதல் திருமணத்தில் முடிய வேண்டும் என்ற எண்ணத்தில் காதலன் ரூவைஸ் தனது பெற்றோரிடம் கூறி, அவர்கள் வந்து இளம்பெண் ஷகானா வீட்டில் திருமண பேச்சு எடுத்துள்ளனர். ஆரம்பத்தில் நன்றாக பேசியதால், திருமணத்திற்கு இரு வீட்டாரும் சம்மதித்தனர். ஆனால் சில நாட்கள் கழித்து ரூவைஸ் வீட்டில் இருந்து, வரதட்சணை கேட்டுள்ளனர்.
ஆரம்பத்தில் ஷகானா வீட்டில் இருந்து, 50 சவரன் நகை, கார், 50 லட்சம் மதிப்பிலான சொத்து உள்ளிட்டவை தருவதாக கூறியுள்ளனர். ஆனால், ரூவைஸ் வீட்டில் இருந்து ஷகானா வீட்டாரிடம் 150 சவரன் நகை, BMW கார், 15 ஏக்கர் நிலம் உள்ளிட்டவை கேட்கப்பட்டுள்ளது. இதனால் இளம்பெண் வீட்டில் இந்த திருமணம் குறித்து யோசனை வந்துள்ளது.
ஆனால் ஷகானாவும் ரூவைஸும் காதலித்து விட்டதால், பெற்றோர் சற்று தடுமாறினர். இதனிடையே வரதட்சனை குறித்து ரூவைஸ், தனது காதலி ஷகானாவிடம் கூறி தொந்தரவு செய்துள்ளார். பெற்றோர்கள் பேச்சை ரூவைஸால் மீற முடியவில்லை என்ற காரணத்தினால் இருவருக்குள்ளும் சண்டை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இளம்பெண் ஷகானா மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 5-ம் தேதி இரவு அவர் பணிக்கு செல்ல வேண்டும். ஆனால் அவர் செல்லவில்லை என்பதால் அவருடன் பணிபுரியும் நபர் ஒருவர் அழைத்துள்ளார். ஆனால் அவர் ஃபோனை எடுக்கவில்லை. இதையடுத்து சில மணி நேரம் கழித்து, அவர் தங்கியிருந்த அறைக்கு வந்து பார்த்தபோது, கதவு பூட்டப்பட்டிருந்தது. பல முறை கதவை தட்டியும் ஷகானா திறக்கவில்லை.
இதனால் அக்கம்பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து அனைவரும் உள்ளே சென்று பார்த்தபோது, மாணவி ஷகானா, அந்த அறையில் மயங்கிய நிலையில் இருந்துள்ளார். இதையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே அவரை சோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் அதிக அளவு மயக்க மருந்து எடுத்துக்கொண்டது தான் அவரது இறப்புக்கு காரணம் என்றும் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவரது அறையை சோதனை செய்தபோது, "திருமணத்துக்கும் பணம் வேண்டும். எல்லோருக்கும் பணம் மட்டும் போதும். எல்லாவற்றையும்விட பணம்தான் பெரிது" என்று எழுதப்பட்டிருந்த கடிதம் ஒன்று கிடைத்தது.
அதனை வைத்து மாணவி ஷகானாவின் குடும்பத்தாரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது இதற்கு காரணம் ரூவைஸ் குடும்பத்தினரின் அழுத்தம் என்று தெரியவந்தது. இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய ஷகானாவின் காதலன் ரூவைஸை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் பூதாகரமான நிலையில், கேரள முதுகலை மருத்துவர் சங்கத் தலைவராக இருந்த ரூவைஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து இதுகுறித்து தற்போது பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், மகளிர் ஆணையம், சிறுபான்மை ஆணையம் உள்ளிட்டவை தாமாக முன் வந்து வழக்கை கையில் எடுத்துள்ளன. கைது செய்யப்பட்ட ரூவைஸ் மீது வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர் கல்லூரியில் இருந்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரம் தற்போது மாநில முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!
Also Read
-
Carrom World Cup : “பெருமை கொள்கிறேன் மகளே...!” - தங்கம் வென்ற காசிமா குறித்து முதலமைச்சர் நெகிழ்ச்சி !
-
தொடரும் அங்கீகாரம்... 55-வது கோவா சர்வதேச திரைப்பட விழா : சிறந்த வெப் சீரீஸ் விருதுக்கு ‘அயலி’ பரிந்துரை!
-
“அதிமுகவை பாஜகவுடன் இணைத்து விடுவார்...” - பழனிசாமி பேச்சுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி !
-
அவதூறு பேச்சு... பதுங்கியிருந்த நடிகை கஸ்தூரி கைது... புழல் சிறையில் அடைப்பு !
-
“மக்கள் கொண்டாடும் திராவிட மாடல் ஆட்சி” : கள ஆய்வு குறித்து, உடன்பிறப்புகளுக்கு முதலமைச்சர் மடல்!