India
ஆந்திராவையும் விட்டு வைக்காத மிக்ஜாம் புயல் : கடும் பாதிப்பு மக்கள் அவதி!
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த ஆய்வு மண்டலம் டிச 3ம் தேதி தீவிர புயலாக மாறியது. இந்த புயலுக்கு மிக்ஜாம் என பெயர் வைக்கப்பட்டது. மிக்ஜாம் புயல் நெல்லூர் மசூலிபட்டடினத்திற்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
மேலும் இந்த புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் செங்கல்பட்டு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதன்படியே டிச 2,3,4 ஆகிய தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகள் மற்றும் பொதுமக்கள் வசிக்கும் இடங்களில் மழைநீர் தேங்கியது.
இதனால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. சாலையில் தேங்கி மழைநீர்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. மேலும் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் பொதுமக்கள் மீட்கப்பட்ட நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டு அவர்களுக்கு மூன்று வேலையும் உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று ஆந்திரா மாநிலம் நெல்லூர் மசூலிபட்டினத்திற்கு இடையே மிக்ஜாம் புயல் கரையைக் கடந்தது. அப்போது 110 கி.மீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசியது. இதனால் நெல்லூர் மற்றும் மசூலிபட்டினம் பகுதியில் வேரோடு மரங்கள் சாய்ந்துள்ளது. அதோடு மின் கம்பங்களும் சாய்ந்துள்ளதால் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த பாதிப்புகளால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்