India
பூனை பிரியர்களே எச்சரிக்கை... ஆசையாக வளர்த்த பூனையால் பறிபோன உயிர்கள்... கதறும் குடும்பம் - நடந்தது என்ன?
உத்தர பிரதேசம் கான்பூரில் அமைந்துள்ளது அக்பர்பூர் என்ற நகரம். இங்கு இம்தியாஸுதின் (58) என்ற நபர் குடும்பத்தோடு வசித்து வருகிறார். அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வரும் இவருக்கு, அசீம் அக்தார் (24) என்ற மகனும் உள்ளார். அசீம் தனது வீட்டில் செல்ல பிராணியாக பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.
தினமும் இவர்கள் அந்த பூனையுடன் விளையாடுவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இந்த சூழலில் இம்தியாஸுதின் கடந்த நவம்பர் 21-ம் தேதி குடும்பத்துடன் போபாலில் உள்ள உறவினர் வீட்டு விழாவுக்கு சென்றுள்ளார். அங்கே இளைஞர் அசீமுக்கு உடல்நிலை சரியில்லாமல் போயுள்ளது. இதனால் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
போபால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், கடந்த நவம்பர் 25-ம் தேதி மீண்டும் கான்பூருக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது வரும் வழியிலேயே இளைஞர் அசீம் உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், இளைஞர் அசீமுக்கு ரேபிஸ் தொற்று இருந்ததும், அதனாலே அவர் உயிரிழந்ததும் தெரியவந்தது.
தொடர்ந்து இதுகுறித்து ஒரு பக்கம் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், மகன் இறந்து 4 நாட்களில் (நவம்பர் 29) தந்தை இம்தியாஸுதினும் உயிரிழந்தார். அவரை பரிசோதித்தபோது, அவருக்கும் ரேபிஸ் தொற்று இருந்தது தெரியவந்தது. இதையடுத்தே வீட்டில் உள்ள பூனையால் அந்த தொற்று ஏற்பட்டது கண்டறியப்பட்டது.
அதாவது அந்த பூனை வெளியில் சுற்றித்திரிந்தபோது, நாய் ஒன்று அதனை தாக்கியுள்ளது. அப்போது அதற்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அசீம் மற்றும் அவரது தந்தையை அந்த பூனை நகத்தால் பிராண்டியுள்ளது. அப்போது ஏற்பட்ட இரத்தக்கசிவு மூலம், பூனையிடம் இருந்து தொற்று தந்தை, மகனுக்கு பரவியுள்ளது.
இதனை பெரிதாக அவர்கள் 2 பேரும் நினைக்காத காரணத்தினால், அந்த பூனை கடித்ததில் அந்த தொற்று ஏற்பட்டு 1 வாரத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். ரேபிஸ் நோய் இருந்த பூனை பிராண்டியதில், நோய் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, மகன் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!