India
🔴 #LIVE | 4 மாநில தேர்தல் முன்னணி நிலவரம் உடனுக்குடன்... காங்கிரஸ் முன்னிலை!
மக்களவைத் தேர்தலுக்கு தயாராவோம் !
"காங்கிரஸுக்கு வரவேற்பு அளித்திருக்கும் தெலங்கானா மக்களுக்கு நன்றி. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. 4 மாநிலங்களிலும் உற்சாகமான பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளின் முயற்சிகள் பாராட்டுக்குரியது. தற்காலிக பின்னடைவுகளைச் சமாளித்து, INDIA கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வரும் மக்களவைத் தேர்தலுக்கு முழுமையாகத் தயாராவோம்."
- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே !
சித்தாந்தப் போர் தொடரும் !
”மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களின் முடிவுகளை நாங்கள் பணிவுடன் ஏற்றுக்கொள்கிறோம். சித்தாந்தப் போர் தொடரும். தெலங்கானா மக்களுக்கு மிகவும் நன்றி. நாங்கள் கூறிய வாக்குறுதியை கண்டிப்பாக நிறைவேற்றுவோம். காங்கிரஸ் கட்சி தொண்டர்களின் உழைப்பிற்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்.”
- ராகுல் காந்தி எம்.பி !
மக்களவைத் தேர்தலுக்கு தயாராவோம் !
"காங்கிரஸுக்கு வரவேற்பு அளித்திருக்கும் தெலங்கானா மக்களுக்கு நன்றி. சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தானில் காங்கிரஸுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. 4 மாநிலங்களிலும் உற்சாகமான பிரசாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளின் முயற்சிகள் பாராட்டுக்குரியது. தற்காலிக பின்னடைவுகளைச் சமாளித்து, INDIA கூட்டணி கட்சிகளுடன் இணைந்து வரும் மக்களவைத் தேர்தலுக்கு முழுமையாகத் தயாராவோம்."
- காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே !
தோல்வியை ஏற்றுக்கொண்ட BRS !
"பாரதிய ராஷ்டிர சமிதி கட்சிக்கு தொடர்ந்து 2 முறை ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்கிய தெலங்கானா மக்களுக்கு நன்றி. இந்த தேர்தல் முடிவு எங்களுக்கு கவலையளிக்கவில்லை; ஆனால் இது ஏமாற்றம் அளித்துள்ளது. இந்த தோல்வியை ஏற்றுக்கொண்டு கற்று மீண்டும் எழுச்சியுடன் நாங்கள் வருவோம். தெலங்கானாவில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கப் போகும் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள்"
- தெலங்கானா அமைச்சரும், அக்கட்சியின் செயல் தலைவருமான கே.டி.ராமாராவ் !
4 மாநில தேர்தல் நிலவரம் !
சத்தீஸ்கர் : காங்கிரஸ் - 33, பாஜக - 54, மற்றவை - 02
மத்தியப் பிரதேசம் : காங்கிரஸ் - 66, பாஜக - 161, மற்றவை - 03
ராஜஸ்தான் : காங்கிரஸ் -70 , பாஜக - 113, மற்றவை - 13
தெலங்கானா : காங்கிரஸ் - 65, பி.ஆர்.எஸ் - 39, மற்றவை - 15
4 மாநில தேர்தல் நிலவரம் !
சத்தீஸ்கர் : காங்கிரஸ் - 35, பாஜக - 53, மற்றவை - 02
ராஜஸ்தான் : காங்கிரஸ் -72 , பாஜக - 111, மற்றவை - 14
மத்தியப் பிரதேசம் : காங்கிரஸ் - 65, பாஜக - 162, மற்றவை - 03
தெலங்கானா : காங்கிரஸ் - 63, பி.ஆர்.எஸ் - 42, மற்றவை - 14
4 மாநில தேர்தல் நிலவரம் !
மத்தியப் பிரதேசம் - காங்கிரஸ் 70, பாஜக 157, மற்றவை 03
ராஜஸ்தான் - காங்கிரஸ் 65, பாஜக 116, மற்றவை 23
சத்தீஸ்கர் - காங்கிரஸ் 32, பாஜக 55, மற்றவை 01
தெலங்கானா காங்கிரஸ் 64, பி.ஆர்.எஸ் - 43, மற்றவை 12
3வது இடத்திற்கு தள்ளப்பட்டார் சந்திரசேகர ராவ்!
தெலுங்கானா காமாரெட்டி தொகுதியில் போட்டியிட்ட அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் முதல்சுற்று முடிவில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார். காங்கிரஸ் வேட்பாளர் ரேவந்த் ரெட்டி 3,607 வாக்குகளுடன் முன்னிலை பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார்.
ம.பி-யில் கமல்நாத் முன்னிலை !
மத்திய பிரதேச மாநிலம் சிந்த்வாரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கமல்நாத் முன்னிலை !
ஒன்றிய அமைச்சர் பின்னடைவு !
மத்திய பிரதேச மாநிலம் திமானி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும், ஒன்றிய வேளாண் அமைச்சருமான நரேந்திர சிங் தோமர் பின்னடைவு !
4 மாநில தேர்தல் நிலவரம் !
மத்தியப் பிரதேசம் - 70, 157, 03
ராஜஸ்தான் - 72 - 104, 23
சத்தீஸ்கர் 39, 49, 02
தெலுங்கானா 68, 40, 07
வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரம்!
காங்கிரஸ் முன்னிலை!
அண்மையில் 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற நிலையில், அதில் 4 மாநிலங்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது. மிசோரத்தில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கும் சத்தீஸ்கரில் முதல்கட்டமாக 20 தொகுதிகளுக்கும் நவம்பர் 7 அன்று தேர்தல் நடைபெற்றது.
சத்தீஸ்கரில் இரண்டாவது மற்றும் இறுதிக் கட்டமாக 70 தொகுதிகள் மற்றும் மத்திய பிரதேசத்தின் 230 தொகுதிகளுக்கு நவம்பர் 17 அன்று வாக்குப் பதிவு நடை பெற்றது. ராஜஸ்தானில் 199 தொகுதிகளுக்கு நவம்பர் 25 அன்றும், தெலுங்கானாவில் 119 தொகுதிகளுக்கு நவம்பர் 30 அன்றும் வாக்குப் பதிவு நடைபெற்றது.
ஐந்து மாநிலங்களிலும் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை சுமார் 16 கோடி என்ற நிலையில், மிசோரத்தில் 77.04 சதவிகிதம், சத்தீஸ்கரில் 76.31 சதவிகிதம், மத்தியப் பிரதேசத்தில் 76.22 சதவிகிதம், ராஜஸ்தானில் 73.92 சதவிகிதம், தெலுங்கானாவில் 70.60 சதவிகிதம் என வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில சட்டமன்றத் தேர்தல்களிலும் பதிவான வாக்குகள் இன்று (டிசம்பர் 3) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. வடகிழக்கு மாநிலமான மிசோரத்தில் மாநில மக்களின் வேண்டுகோளை ஏற்று, வாக்கு எண்ணிக்கை திங்கட்கிழமைக்கு (டிசம்பர் 4) மாற்றப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்கள் காங்கிரஸ் வசமும், மத்தியப்பிரதேசம் பாஜக வசமும், தெலுங் கானா பாரத் ராஷ்டிர சமிதி கட்சி வசமும் உள்ள மாநி லங்கள் ஆகும். மிசோரத்தில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி தற்போது ஆட்சியில் உள்ளது.
இன்று காலை 7 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில் 4 மாநிலத்தில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. அதன்படி காலை 9.30 மணி நிலவரப்படி, மத்தியப் பிரதேசம் - காங்கிரஸ் 103 - பாஜக 116, மற்றவை 08, ராஜஸ்தான் - காங்கிரஸ் 84 - பாஜக 85, மற்றவை 00, சத்தீஸ்கர் - காங்கிரஸ் 57, பாஜக 37, மற்றவை 00, மற்றும் தெலுங்கானாவில் காங்கிரஸ் 57, பாஜக 31, மற்றவை 02 என முன்னிலையில் உள்ளன.
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!