India

இசை நிகழ்ச்சியில் பாட வாய்ப்பு : இந்தியா வந்த மெக்ஸிகோ பெண்ணை வன்கொடுமை செய்த இசைக்குழு உரிமையாளர் !

மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், பிரதிக் பாண்டே(வயது 36) என்பவர் இசைக்குழு அமைத்து பல்வேறு இடங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதனிடையே மெக்சிக்கோ நாட்டை சேர்ந்த 31 வயது பெண் ஒருவர் மாடலிங் வாய்ப்பு தேடி சென்னை வந்துள்ளார்.

அந்த மெக்ஸிகோ பெண்ணுக்கு பிரதிக் பாண்டே அறிமுகமாகியுள்ளார். அந்த பெண்ணிடம் தனது குழுவில் இணையுமாறும், அப்படி இணைந்தால் அதிக வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறி, தனது குழுவில் அந்த மெக்ஸிகோ பெண்ணை சேர்ந்துள்ளார்.

பின்னர் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறி, அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். முதலில் அபாச மெசேஜ் செய்த பிரதிக் பாண்டே, பின்னர் அந்த பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்து அங்கு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அதோடு நிற்காமல், இசை நிகழ்ச்சிக்கு செல்லும் போதெல்லாம் அந்த பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். பின்னர் அந்த பெண் பிரதிக் பாண்டேவிடமிருந்து விலக முயன்றபோது அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண் இது குறித்து தூதரகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து காவல்நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த புகாரின் அடிப்படையில் பிரதிக் பாண்டேவை போலிஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். இந்த சம்பவம் மும்பையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ரூ.20 லட்சம் லட்சம் : கையும் களவுமாக மாட்டிக் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரி - அதிரடி கைது!