India

9 குழந்தைகள், 2 மனைவிகள், 6 காதலிகள்.. திருடனாக மாறிய சோஷியல் மீடியா பிரபலம்! - சிக்கியது எப்படி ?

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை அடுத்துள்ள கோண்டா என்ற பகுதியை சேர்ந்தவர் அஜீத் மௌரியா (41). சமூக வலைதளத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் இவருக்கு, கடந்த 2000-ம் ஆண்டில் சங்கீதா (40) என்ற பெண்ணோடு திருமணமாகியுள்ளது. அப்போது இருவரும் மும்பையில் வசித்து வந்த நிலையில், அந்த தம்பதிக்கு 7 குழந்தைகள் இருந்தனர். அந்த சமயத்தில் 2010-ம் ஆண்டு அஜீத்துக்கு வேலை பறிபோனது.

இதையடுத்து மீண்டும் தனது சொந்த ஊருக்கு வந்து வேலை செய்து வந்தார். எனினும் அவருக்கு லாபகாரமான வேலையாக அது இல்லை என்று, மீண்டும் வேலை தேடி அழைந்து கொண்டிருந்தார். அப்போது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக முதல் முறையாக கடந்த 2016-ம் ஆண்டு திருட்டு தொழிலில் இறங்கினார். அப்போது இவர் போலீசில் சிக்கவில்லை என்பதால், மீண்டும் மீண்டும் சிறுசிறு திருட்டு தொழிலில் இருந்து வந்துள்ளார்.

அந்த சமயத்தில் 2 ஆண்டுகள் கழித்து அஜித்துக்கு, சுசிலா (30) என்ற பெண்ணின் அறிமுகம் கிடைத்துள்ளது. இருவரும் சேர்ந்து கள்ள நோட்டு புழக்கத்தில் விடுவது மற்றும் போலி நிதி நிறுவனம் நடத்துவது போன்று பல மோசடி செயல்களில் ஈடுபட்டுள்ளனர். இதில் பணம் அதிகம் சம்பாதித்து வந்த நிலையில், அஜித், புதிதாக 2 வீடுகள் கட்டி முடித்து விட்டார்.

அதில் ஒரு வீட்டில் தனது மனைவி சங்கீதா மற்றும் 7 பிள்ளைகளும், மற்றொரு வீட்டில் இவரும், சுசீலாவும் இருந்து வந்துள்ளனர். அப்போது அஜித்துக்கும் சுசிலாவுக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டு இருவரும் திருமணமும் செய்துகொண்டனர். தற்போது சுசீலாவுக்கு 2 குழந்தைகள் இருக்கும் நிலையில், அவருக்கு அந்த வீட்டை கொடுத்து விட்டு, வேறொரு வாடகை வீட்டில் அஜித் வசித்து வந்து, தொழிலை பார்த்து வந்துள்ளார்.

இதனிடையே பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி தர்மேந்திரா என்பவரிடம் ரூ.3 லட்சத்தை பெற்றுள்ளார். ஆனால் அதனை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்ட தர்மேந்திரா போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், இதுகுறித்து விசாரித்து வந்தனர்.

தொடர்ந்து இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட அஜித்தை அதிரடியாக கைது செய்தனர். அப்போது அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் தெரியவந்தது. மேலும் அவர் மீது கொள்ளை, பண மோசடி என மொத்தம் 9-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதும் கண்டறியப்பட்டது.

தொடர்ந்து அஜித்தின் மொபைல் போனை பறிமுதல் செய்து ஆய்வு செய்தபோது, அவருக்கு 2 மனைவி, 9 பிள்ளைகளை தாண்டி, 6 காதலிகளும் தெரியவந்தது. அதோடு அந்த காதலிகளிடம் இவர் நெருங்கி பழகியுள்ளதும், அவர்களுடன் அடிக்கடி இவர் வெளிநாடுகளுக்கு சென்று வந்ததும் தெரியவந்தது.

மேலும், லக்னோவில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் அமர்ந்து காதலியுடன் வெளிநாட்டில் புத்தாண்டை கொண்டாட திட்டமிட்டுக்கொண்டிருந்த போதுதான் போலிசார், அஜித் மௌரியாவை போலீசார் கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து அவர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

Also Read: அரசு வேலை கிடைத்ததும் கடத்தல்: துப்பாக்கி முனையில் மகளுடன் திருமணம் நடத்தி வைத்த தொழிலதிபர் -காரணம் என்ன?