India
மக்கள் போராட்டத்தின் எதிரொலி : திடீரென மாற்றம் செய்யப்பட்ட மிசோரம் வாக்கு எண்ணிக்கை.. காரணம் என்ன ?
இந்தியாவில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த மாதத்தில் (நவம்பர்) சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. 5 மாநில தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அறிவித்தனர்.
தொடர்ந்து நடைபெற்ற தேர்தல் வாக்குப்பதிவானது, தெலங்கானா மாநிலத்துக்கு நேற்று முடிந்த நிலையில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் எந்த பிரச்னையும் இல்லாமல் நிறைவடைந்து விட்டது. இதைத்தொடர்ந்து நேற்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியானது. அதன்படி காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த சூழலில் நேற்றுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வரும் டிசம்பர் 3-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) வாக்கு எண்ணக்கை, அடுத்த நாளான 4-ம் தேதிக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது. மிசோரம் மாநிலத்தில் கிறிஸ்துவ மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். எனவே அவர்கள் ஞாயிற்றுக்கிழமை தேவாலயத்துக்கு செல்வது வழக்கம்.
இதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை மாற்றி வைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனால் அதற்கு எந்தவித பதிலும் கிடைக்கவில்லை என்பதால், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மாநில தலைநகரில் பேரணியும் மேற்கொண்டனர். தேர்தல் ஆணையம் தங்களது கோரிக்கைக்கு பதில் அளிக்கவில்லை என்று கண்டனமும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் மிசோரம் மக்களின் தொடர் கோரிக்கையை ஏற்று, தேர்தல் வாக்குபதிவின் வாக்கு எண்ணிக்கை ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிசோரம் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பான நாள் என்பதால், மாநில மக்களின் கோரிக்கையை ஏற்று டிசம்பர் 3-ம் தேதியில் இருந்து மறுநாள் 4-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மிசோரம் மாநிலத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சி, சோரம் மக்கள் முன்னணி, காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய கட்சிகளுக்கு கடும் போட்டி நிலவிய நிலையில், வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 7-ம் தேதி நடைபெற்றது. நேற்று நடைபெற்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் காங்கிரஸ் ஆதரவுடன் ஏதேனும் ஒரு கட்சி ஆட்சியமைக்கும் என்று கூறப்படுகிறது என்பது கூடுதல் தகவல்.
Also Read
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!