India

5 மாநில தேர்தல் : ”Exit Poll முடிவில் ஓங்கும் ‘கை’..” : வெற்றிவாகை சூடப்போகும் காங்கிரஸ் !

இந்தியாவில் ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஒரு முறை மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு தெலங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு இந்த மாதத்தில் (நவம்பர்) சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. தெலங்கானா மாநிலத்துக்கு இன்று சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் எந்த பிரச்னையும் இல்லாமல் நிறைவடைந்து விட்டது.

5 மாநில தேர்தலை முன்னிட்டு பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அறிவித்தனர். 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தலுக்கு முன்னதாக டிவி9, ஜன் கி பாத், சி ஓட்டர்ஸ், லோக் பல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் கருத்து கணிப்பு வெளியிட்டன.

இந்த நிலையில், தற்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி 5 மாநிலங்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்பு என்று சில நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

அதன்படி ஜன் கி பாத் நிறுவனம் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு பின்வருமாறு :

* 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி 102 - 125 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என்றும், ஆளுங்கட்சியான பாஜக 100-123 இடங்களை கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது.

* 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி 48 - 64 தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியமைக்கும் என்றும், ஆளுங்கட்சியான பி.ஆர்.எஸ் 40 - 55 இடங்களை மட்டுமே கைப்பற்றும் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் தெலுங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியமைக்கும்.

* 90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சி 42 - 53 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்தியா டுடே நாளிதழின் கருத்துக் கணிப்பு பின்வருமாறு :

* ராஜஸ்தான் மாநிலத்தின் 199 தொகுதிகளில் 86-106 இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளது.

* சத்தீஸ்கரில் 50-க்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் தனது ஆட்சியை தக்க வைக்கும் என India Today Axis, C-voter, India Tv-CNX, JAN KI BAAT, Republic உள்ளிட்ட நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல் !

* தெலங்கானாவில் முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது என தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகளில் தகவல். கருத்து கணிப்பு நடத்திய அனைத்து நிறுவனங்களும் பெரும்பான்மையான இடங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றி ஆட்சியமைக்கும் எனவும் தகவல் !

Also Read: “நாங்கள் கிரிக்கெட்டில் மட்டும் சிறந்தவர்கள் அல்ல” -சுரங்க விபத்தில் முக்கிய பங்காற்றிய அர்னால்ட் டிக்ஸ்!