India
பேட்மிண்டன் விளையாடும்போது ஏற்பட்ட நட்பு.. பேசலாம் என்று அழைத்து பெண் மருத்துவரை வன்கொடுமை செய்த வாலிபர்!
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் அமைந்துள்ள பகுதி ஒன்றில் பெண் ஒருவர் வசித்து வருகிறார். மருத்துவரான இவருக்கு திருமணமாகியுள்ளது. ஆனால் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த சூழலில் இவர் தினமும் பேட்மிண்டன் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
பேட்மிண்டன் விளையாடுவதற்காக டார்டியோ என்ற பகுதிக்கு தினமும் சென்று வந்துள்ளார். அப்போது இவருக்கு வாலிபர் ஒருவரது பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் நட்பாக பழகி வந்துள்ளனர். அப்போது இந்த பெண் மருத்துவர் தனது குடும்ப வாழ்க்கை குறித்தும் அந்த நபரிடம் பகிர்ந்துள்ளார். அவரும் இவருக்கு ஆறுதல் கூறி வந்துள்ளார்.
இந்த நிலையில், இவர் நட்பாக பேசுவதை தனக்கு சாதகமாக்க நினைத்த அந்த வாலிபர், இந்த பெண் மருத்துவரை வீட்டுக்கு அழைத்துள்ளார். அவரும் இவர் அழைத்ததற்கு மறுபேச்சு பேசாமல் சென்றுள்ளார். அந்த சமயத்தில் அந்த வாலிபரின் வீட்டிலும் யாருமில்லை. வீட்டுக்கு வந்த அந்த பெண்ணுக்கு குடிக்கு கூல் ட்ரிங்க்ஸ் கொடுத்துள்ளார் அந்த வாலிபர்.
அதனை குடித்து சிறிது நேரத்திலேயே மயக்க நிலைக்கு சென்ற அந்த பெண்ணை, அந்த வாலிபர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்தே தான் பாதிக்கப்பட்டது அந்த பெண் மருத்துவருக்கு தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் இந்த நபர் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், அவரது ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோவை அவருக்கு அனுப்பி, இணையத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் மிகவும் பதற்றமடைந்த அந்த பெண் மருத்துவர் உடனே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் ஐ.பி.சி. 376 மற்றும் 384 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றம்சாட்டப்பட்ட நபரை அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!
-
நாகூர் சந்தனக்கூடு திருவிழா ஏற்பாடுகள்! : நேரில் ஆய்வு செய்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!