India

ஆபாச வீடியோ.. நாட்டையே உலுக்கிய மீண்டும் ஒரு கூட்டு பாலியல் : உ.பி-யில் கேள்விக்குறியாகும் பெண்களின் நிலை

இந்தியாவில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பாக பாலியல் தொடர்பான குற்றங்கள் பாஜக ஆட்சிக்கு பிறகு அதிகரித்து வருகிறது. அதிலும் பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த சம்பவங்கள் பெரிய அளவு நடக்கிறது. உத்தர பிரதேசத்தின் ஹத்ராஸ் சம்பவம் நாடு முழுதும் உலுக்கியது.

எனினும் பாஜக இது தொடர்பாக பெரிதாக நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்து வருகிறது. இந்த சூழலில் தற்போது பாஜக ஆளும் மாநிலமான உ.பி-யில் மேலும் ஒரு கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் அரங்கேறி நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் தனியார் விடுதியில் பல பெண்கள் தங்கி வேலைக்கு மற்றும் கல்லூரிக்கு சென்று வருகின்றனர். இந்த சூழலில் அதில் 25 வயது பெண் ஒருவர் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார். அந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, அடித்து துன்புறுத்தப்படும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், அந்த பெண்ணை கும்பல் ஒன்று சேர்ந்து கடுமையாக தாக்குகிறது. பின்னர் கூட்டு பாலியல் வன்கொடுமை நடக்கிறது. அப்போது அந்த பெண் தடுக்க முயல்கிறார். ஆனால் அவரை அந்த கும்பல் கடுமையாக தாக்குகிறது. தனக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதாக கூறி அந்த பெண் கதறுகிறார்.

இருப்பினும் அவரை விடாத அந்த கும்பல், மது குடிக்குமாறு வறுபுறுத்தி வாயில் ஊற்றுகிறது; அதனை அவர் தடுக்க முயலும்போது, அவர் தலையில் மது பாட்டிலை கொண்டு அந்த கும்பலில் ஒருவர் தாக்குகிறார். இந்த சம்பவம் குறித்த வீடியோ அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்வலையையும் கண்டங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

தொடர்ந்து தற்போது அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் விசாரிக்கையில், விடுதியில் தங்கி வேலைக்கு சென்று வரும் அந்த பெண்ணை ஆபாச வீடியோ எடுத்து முதலில் அந்த கும்பல் எடுத்து மிரட்டியுள்ளனர். மேலும் அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். தான் விட்டுவிடும்படி கெஞ்சியும், அந்த கும்பல் தன்னை விடவில்லை என்று அந்த பெண் கதறி அழுது வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இந்த விவகாரம் தொடர்பாக ஒரு பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: இஸ்லாமிய மாணவரை சக மாணவர்களை வைத்து தாக்கிய ஆசிரியர்: உ.பி அரசின் செயலுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் !