India
இரும்பு கம்பியால் தாக்கி, பூச்சி மருந்து கொடுத்து கொடூர கொலை.. தந்தையில் வெறிச்செயலால் அதிர்ச்சி !
கேரள மாநிலம் ஆலுவா பகுதியை சேர்ந்தவர் அபீஸ் முகமது (43). இவர் கொச்சியில் உள்ள வல்லார்பாடம் பரிமாற்றம் பரிமாற்றம் முனையத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 16 வயது மகள் ஃபாத்திமா, அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார்.
இந்த சூழலில் இவர், தனது வகுப்பில் படிக்கும் ஒருவரை காதலித்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் அவரது வீட்டாருக்கு தெரிந்ததையடுத்து அபீஸ் கடும் ஆத்திரம் கொண்டுள்ளார். இதனால் மகள் - தந்தைக்கு இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும் மகள் காதலித்தவர் வேற்று மதத்தை சேர்ந்தவர் என்பதால் தந்தை தனது மகளை அடித்து தாக்கியுள்ளார்.
இருப்பினும் தனது முடிவில் இருந்து மாறாமல் இருந்துள்ளார் மகள். இதனால் மேலும் ஆத்திரம் கொண்ட தந்தை, தனது மகளை கடுமையாக தாக்கியுள்ளார். அதோடு அவரை தனது வீட்டில் இருந்த இரும்பு கம்பியை கொண்டு குடுமியாக தக்கியுள்ளார். அப்போது இரத்த வெள்ளத்தில் கீழே கிடந்த மகளின் வாயில் பூச்சி மருந்தையும் ஊற்றியுள்ளார்.
இதில் உயிருக்கு போராடி கொண்டிருந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து போலீசுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் தந்தை அபீஸை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட தந்தை அபீஸிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். பள்ளி மாணவி, வேறொரு மதத்தை சார்ந்தவரை காதலித்தால், மகள் என்றும் பாராமல் கொடூரமாக கொலை செய்துள்ள தந்தையின் செயல் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆணவ கொலைக்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!