India
60 மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட பள்ளி தலைமையாசிரியர் : பாஜக ஆளும் ஹரியானாவில் அதிர்ச்சி!
பா.ஜ.க ஆட்சி செய்து வரும் மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. குறிப்பாகப் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு ஆளாகி வருகிறார்கள்.
உத்தர பிரதேச மாநிலத்தில் இளம் பெண்ணை கடத்தி 20 நாட்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை, தனியாக இருந்த பெண்ணை டெலிவரி ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் நோயாளி பாலியல் வன்கொடுமை என தினமும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள் நடந்து கொண்டே இருகிறது.
இந்நிலையில், ஹரியானாவில் 60 மாணவிகளுக்குப் பள்ளி தலைமையாசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதுவும் பாதிக்கப்பட்ட பெண்கள் குடியரசுத்தலைவர், பிரதமர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்டோருக்கு 15 பக்க கடிதம் ஒன்றை எழுதிய பிறகுதான் இக்கொடூர சம்பவம் வெளிவந்துள்ளது.
ஹரியானா மாநிலத்தின் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தான் இந்த கொடூரம் நடந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளின் கடிதத்திற்கு பிறகே போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்துள்ளனர். அப்போதுதான் பள்ளி தலைமை ஆசிரியர் 60க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதும், மாணவிகளை மிரட்டியதும் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் பள்ளி தலைமையாசிரியரைக் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் தற்போது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!