India

நவராத்திரி : ஒரே நாளில் 10 பேருக்கு மாரடைப்பு.. 609 பேருக்கு மூச்சுத்திணறல்.. குஜராத்தில் அதிர்ச்சி !

இந்தியாவில் ஆண்டுதோறும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. சுமார் 9 நாட்கள் கொலு வைத்து இந்துக்கள் இந்த பண்டிகையை கொண்டாடிவருவர். ஒவ்வொரு நாளில் ஒவ்வொன்றையும் பக்தர்கள் செய்து வழிபடுவர். 9 நாட்கள் கொண்டாடப்படும் இந்த பண்டிகை இந்த ஆண்டு கடந்த 15-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெறுகிறது.

தசரா பண்டிகையை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடி வரப்படுகிறது. மேலும் வட மாநிலங்களில் தங்கள் பாரம்பரிய நடனமாடியும் மகிழ்வர். அந்த வகையில் குஜராத்தில் 'கார்பா' என்று சொல்லப்படும் பாரம்பரிய நடனத்தை மக்கள் நடனமாடி வருவர். இதில் பெண்கள், ஆண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என அனைவரும் பங்குபெறுவர். இந்த நடனத்தின்போது அதற்கு ஏற்றாற்போல் உடை அணிந்தும் கொள்வர்.

இந்த 'கார்பா' (Garba) நடனம் குஜராத்தில் மிகவும் பிரபலமானது. ஆண்டுதோறும் இந்த நடனத்தில் பலரும் பங்கேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவர். குஜராத்திலே இந்த பண்டிகை மிகவும் பிரபலமானது என்பதால் அங்குள்ள மக்கள் இதனை ஆண்டுதோறும் விமர்சியாக கொண்டாடி வருவர்.

இந்த சூழலில் இந்தாண்டு நடைபெற்ற கொண்டாட்டத்தில் அம்மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்டோர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. அதாவது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நேற்று ஒரு நாள் (24 மணி நேரத்தில்) மட்டும் சுமார் 10 பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் கடந்த 6 நாட்களில், 108 ஆம்புலனசுக்கு சுமார் 500-க்கும் மேற்பட்டோர் மாரடைப்பு என்றும், 609 பேருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாகவும் ஃபோன் கால் வந்திருக்கிறது. அதுவும் மாலை 6 மணியில் இருந்து அதிகாலை 2 மணி வரை வந்துள்ளது. இதில் பெரும்பாலும் சிறுவர்களும், இளைஞர்களும் மட்டுமே இருப்பதாக தகவல்கள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இந்த நடனத்தின்போது அருகில் மருத்துவ உபகரணங்கள் வைத்திருக்க வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ரஷ்ய பெண்ணிடம் ஆபாச பேச்சு.. டெல்லியில் அத்துமீறிய இந்திய இளைஞர்.. வீடியோவுக்கு குவியும் கண்டனம் !