India

அதானி - மோடி கூட்டணிக்கு செக் வைக்கும் இந்தியா கூட்டணி : விழிபிதுங்கி கிடக்கும் பா.ஜ.க கூட்டம் !

அமெரிக்காவின் “ஹிண்டன்பர்க் ரிசர்ச்” என்ற முதலீட்டு ஆய்வு நிறுவனம் கடந்த ஜனவரியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்த அறிக்கையில் மோடியின் நெருங்கிய நண்பரான அதானி தனது சொத்துகளை உயர்த்த எவ்வாறு மோசடியில் இறங்கினார் என்பதை அம்பலப்படுத்தியது.

குறிப்பாக அந்த அறிக்கையில், அதானி குழுமம் பல ஆண்டுகளாக நிதி முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாகவும், இதனால் அந்த நிறுவனத்தால் இந்திய அரசுக்கு அதிக நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருக்கிறது. மேடைக்கு மேடை வளர்ச்சி பற்றி பேசும் பிரதமர் மோடி, இதுகுறித்து 9 மாதங்களாக வாய்த்திறக்காமல் கள்ள மெளவுனம் காத்து வருகிறார்.

மேலும் இந்த விவகாரத்தை கையில் எடுத்த இந்தியா கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்தில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தது. ஆனால் மோடி அரசு செவி சாய்க்கவில்லை. அதுமட்டுமல்லாது, பிரதமர் மோடி எங்கெல்லாம் வெளிநாடு சுற்றுப்பயணம் செய்கிறாரோ அப்போதெல்லாம் அதானியை கையோடு அழைத்துச் சென்றிருக்கிறார். இதுதொடர்பான புகைப்படத்தை கையோடு நாடாளுமன்றத்திற்கு எடுத்துச் சென்ற கேள்வி எழுப்பியது எதிர்க்கட்சிகள்.

புகைப்படத்தை கையில் வைத்து நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி உரை, பாஜக எம்.பி.க்களை கலக்கம் அடைய செய்தது. அதேவேளையில் ராகுல் காந்தி காங்கிரஸ் எம்.பி பதவியும் பறிக்கப்பட்டது. ராகுல் பதவி பறிக்கப்பட்டதற்கு பின்னால் அவரின் நியாயமான கேள்வியும், மோடியை ராகுல் ஆதாரோத்தோடு விமர்சித்ததும் காரணமாக உள்ளது என காங்கிரஸ் கட்சியினர் கூறி வந்தனர். இவ்வளவுக்கு மத்தியில் ராகுல் காந்தியும், எதிர்க்கட்சிகளும் பின்வாங்கவில்லை.

அதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் ராகுல் அளித்த பேட்டி இந்தியா முழுவதும் மீண்டும் பட்டாசை கொளுத்தியது போல சலசலப்பை உண்டாக்கியது. குறிப்பாக அந்த பேட்டியில், சுமார் ரூ.12,000 கோடி அதானி குழுமம் மக்களிடம் இருந்து திருடியுள்ளதாக எடுத்த எடுப்பிலேயே உண்மையை போட்டுடைத்தார்.

அதுமட்டுமல்ல, அதானி குழுமம் சந்தை மதிப்பை விட அதிகமாக கொடுத்து பல நூறு கோடி டாலர்களுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்திருப்பதை சுட்டிக்காட்டிய ராகுல் காந்தி, இந்தோனேசியாவில் இருந்து அதானி வாங்கிய நிலக்கரியை இந்தியாவிற்கு பல மடங்கு அதிகமாக உயர்த்தி விற்கு சொந்த மக்களுக்கே பட்டை அடித்திருக்கிறார் அதானி என்றும் புட்டுப்பட்டு வைத்தார்.

இது எப்படி மக்களுக்கு சுமையாகும் என பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்பும் முன்பே அதுகுறித்து பேசிய ராகுல் காந்தி, அதானியின் நிலக்கரி இறக்குமதி கொள்ளையால், இந்தியாவின் சாமானிய மக்களின் மின் கட்டணத்தில் மிகப்பெரிய தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் மின் கட்டணம் இரட்டிப்பாக உயர்ந்து மக்கள் தலையில் விழுந்தாகவும் எடுத்துரைத்தார் ராகுல் காந்தி.

இன்று உலக நாடுகளில் பல நாடுகள் ஊழல் முறைகேடு புகார்களால் அந்த நாட்டின் ஆட்சியே கவிழ்க்கப்பட்டு, பிரதமர் சிறைக்குச் செல்லும் நிலைமை கூட உண்டாகி இருக்கிறது. ஆனால் கெடு வாய்ப்பாக இந்தியாவில் அப்படி எந்தவொரு சம்பவமும் நடைபெறால் ஊடகமும், மோடியும் பார்த்துக்கொண்டனர்.

2ஜி குற்றச்சாட்டை பூதாகரமாக்கிய இதே மோடிதான், அதானி விவகாரம் பூதாகரமாகாமல் பார்த்துகொண்டிருக்கிறார். அதோடு இல்லாமல், ஒன்றிய அரசு திட்டங்களில் ரூ.7.50 லட்சம் கோடி இழப்பை அம்பலப்படுத்திய சி.ஏ.ஜி அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் நமக்கு சில கேள்விகள் எழாலம் அதானி யாருடைய பாதுகாப்பில் இருக்கிறார்?

அதானியை பாதுகாக்கும் அதிகாரம் யாருக்கு இருக்கிறது?

அதானி விவகாரத்தில் மோடி அரசாங்கத்தின் மயான அமைதி ஏன்? இந்த கேள்விக்கு மோடி வகையராக்களிடம் நிச்சயம் பதில் இருக்காது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குகிறது. ஒன்றியத்தில் நடைபெற்ற ஆட்சியை ஊழல் இல்லாத ஆட்சி என தம்பட்டம் அடிக்கத் தொடங்கியிருக்கிறது பாஜக கும்பல். மோடி ஆட்சியில் நடந்த மத மோதல்கள், வன்முறை, ஊழல் என அடுத்தடுத்த மக்கள் விரோத நடவடிக்கையை முன்வைத்து மோடிக்கு எதிராக வியூகம் அமைக்கிறது இந்தியா கூட்டணி. இந்தியா கூட்டணியின் பலம் அதிகரிக்க இந்த வியூகம் முக்கிய பங்காற்றும்.

Also Read: பெருமுதலாளிகளுக்கு ரூ.25 லட்சம் கோடி அள்ளிக் கொடுத்த மோடி அரசு : RTI மூலம் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!