India
மகளிருக்கு ரூ.1500 உதவித் தொகை : திராவிட மாடல் அரசை பின்பற்றி தேர்தல் அறிக்கை வெளியிட்ட காங்கிரஸ்!
மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 17ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் டிச. 3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இதையடுத்து 18 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பா.ஜ.க ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளத் தீவிரமாகப் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறது. தனது வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதேநேரம் பா.ஜ.க ஆட்சி மீது மக்கள் மத்தியில் அதிருப்பிதயை ஏற்படுத்தியுள்ளது.
அதேபோல் காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணிக் கட்சிகளுடன் கூட்டணி வைத்து காங்கிரஸ் கட்சி தேர்தலைச் சந்திக்கத் திட்டமிட்டு வருகிறது. மேலும் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என தெரிவித்துள்ளது. இது பா.ஜ.கவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் திட்டங்களைப் பின்பற்றித் தேர்தல் வாக்குறுதிகளை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் குறிப்பாக இந்தியாவே போற்றும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்ததைபோன்றே, மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ரூ.1500 உதவித் தொகை மாதந்தோறும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அனைவருக்கும் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு, ரூ.2 லட்சம் வரையிலான வேளாண் கடன்கள் தள்ளுபடி, ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர், பள்ளி கல்வி இலவசம், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என உள்ளிட்ட 59 தேர்தல் வாக்குறுதிகள் அறிவித்துள்ளது.
Also Read
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!