India

வங்கி Statement எடுக்க முனைப்பு காட்டிய பெண் : ஆன்லைனில் கிடைத்த எண்ணை தொடர்பு கொண்டதால் நேர்ந்த சோகம் !

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அமைந்துள்ள சிவாஜி நகரில் பெண் ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இந்த பெண், தனது ஜூலை மாத வங்கி கணக்கின் பணத்தின் விவரங்கள் குறித்து அறிய ஸ்டேட்மெண்ட் எடுக்க எண்ணியுள்ளார். ஆனால் அதனை எடுக்க வங்கிக்கு செல்ல வேண்டும் என்பதால் ஆன்லைன் மூலம் எடுக்க முடியுமா என்று இணையத்தில் தேடியுள்ளார்.

அப்போது இணையத்தில் வாடிக்கையாளர் மைய எண் என்று ஒரு போன் நம்பர் இருந்துள்ளது. இந்த பெண்ணும் அதற்கு உடனே தொடர்பு கொண்டு இதுகுறித்து கேட்டுள்ளார். அதற்கு எதிர்தரப்பில் இருந்து பேசிய நபர், ஒரு ஆப்பை பதிவிறக்கம் செய்து அதில் விவரங்களை பதிவேற்ற கூறியுள்ளார். அதன்படி இவரும் அவர் கூறிய ஆப்பை பதிவிறக்கம் செய்து, வங்கி எண், பாஸ்வேர்ட் உள்ளிட்டவையை கொடுத்துள்ளார்.

அவர் அனைத்தும் செய்து முடித்த சில மணித்துளிகளிலேயே அவரது வங்கி கணக்கில் இருந்து சுமார் ரூ.11 லட்சம் பணம் எடுக்கப்பட்டுள்ளதாக அவரது எண்ணுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனால் அதிர்ந்துபோன அந்த பெண் உடனடியாக இதுகுறித்து வங்கியில் சென்று கேட்டுள்ளார். பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து இந்த சம்பவம் குறித்து சைபர் கிரைமில் புகார் தெரிவித்துள்ளார்.

அந்த பெண் அளித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்காலமாக இதுபோல் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்களும் எச்சரிக்கையுடனும் விழுப்புடனும் இருக்க வேண்டும் என்று காவல்துறையினர் அறிவுறுத்த வருகின்றனர். எனினும் மக்கள் செய்யும் சிறிய தவறால் இதுபோன்று பணத்தை இழக்க நேரிடுகிறது. எனவே மக்கள் எதை செய்தாலும் யோசித்து செய்ய வவேண்டும்.

Also Read: பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமி.. புகைப்படங்களை பகிர்ந்து விளம்பரம் தேடிய பாஜக பெண் நிர்வாகி கைது !