India
ரூ.608 கோடி ஒதுக்கி ஒரு பதக்கம் கூட பெறாத குஜராத்: எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலத்தை வஞ்சிக்கும் மோடி அரசு!
மோடி அரசின் ‘பாரபட்சம்’ : ஆசிய விளையாட்டில் ‘படுதோல்வி’
சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்ற 19-ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியா இதுவரை இல்லாத வகையில் 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என 107 பதக்கங்களை வென்று வரலாறு படைத்தது. மாநில வாரியாக அதிகபட்சமாக ஹரியானா 44 பதக்கங்களும், பஞ்சாப் 32 பதக்கங்களும், மகாராஷ்டிரா 31 பதக்கங்களும், உத்தரப்பிரதேசம் 21 பதக்கங்களும், தமிழ்நாடு 17 பதக்கங்களும், மேற்கு வங்கம் 13 பதக்கங்களும், ராஜஸ்தான் 13 பதக்கங்களும், மிசோரம் ஒரு பதக்கமும் வென்றுள்ளன.
இதில், குறிப்பிட வேண்டிய விஷயம் என்னவென்றால், ‘கேலோ இந்தியா’ திட்டத்தின் கீழ் ஒன்றிய அரசின் விளையாட்டுத்துறை பட்ஜெட்டில், மிக குறைவான நிதி ஒதுக்கீட்டைப் பெற்ற மாநிலங்களே, ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்க வேட்டை நடத்தியுள்ளன. மாறாக, நாட்டிலேயே மிக அதிகமான நிதி ஒதுக்கீட்டை பெற்ற குஜராத் மாநிலம் ஒரு பதக்கம் வெல்ல முடியாமல் சோகத்துடன் திரும்பியுள்ளது என்பதுதான்.
குஜராத் ரூ.608 கோடி-“0” பதக்கம் :
கேலோ இந்தியா திட்டத்தின் கீழ் ஹரியானா ரூ. 88.89 கோடியும், பஞ்சாப் ரூ. 93.71 கோடியும், மகாராஷ்டிரா ரூ. 110.8 கோடியும், உத்தரப் பிரதேசம் ரூ. 503.02 கோடியும், தமிழ்நாடு ரூ. 33 கோடியும், மேற்கு வங்கம் ரூ. 26.77 கோடி யும், ராஜஸ்தான் ரூ. 112.26 கோடியும், மிசோரம் ரூ. 39 கோடியும், மோடியின் சொந்த மாநிலமான குஜராத் அதிகப் பட்சமாக ரூ. 608 கோடி நிதியை பெற்றுள்ளன.
இதில், மோடி அரசிடமிருந்து ரூ.200 கோடிக்கும் குறைவான பட்ஜெட் ஒதுக்கீட்டைப் பெற்றுள்ள பஞ்சாப், ஹரியானா மாநிலங்கள்தான், இந்தியா வென்றுள்ள 107 பதக்கங்களில் 75 பதக்கங்களை பெற்றுத் தந்துள்ளன. வெறும் 33 கோடி ரூபாய் மட்டுமே நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ள தமிழ்நாடு மட்டும் தனியாக 17 பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
ஆனால் ரூ. 608 கோடி என பிரம்மாண்டமான நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுள்ள குஜராத் மாநிலம் ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஒரு பதக்கம் கூட வெல்லாமல் திரும்பியுள்ளது. மேற்குறிப்பிட்ட விஷயம் மாநிலங்களுக்கு இடையேயான போட்டி அல்ல. மாநில எல்லைகளின் அடிப்படையில் மக்களை பிரிப்பதற்காக அல்ல. மாறாக, பிரதமர் நரேந்திர மோடியும், ஒன்றிய பாஜக அரசும், இனிமேலாவது அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பதுதான்.
விளையாட்டிலும் தங்களுக்கு வேண்டிய மாநிலம் வேண்டாத மாநிலம் என்று பாகுபாடு பார்த்து நிதி ஒதுக்கீடு செய்வதைக் கைவிட வேண்டும் என்பதுதான்.
- நன்றி தீக்கதிர்
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!