India

2010 முதல் தற்போது வரை.. UAPA சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட 16 பத்திரிகையாளர்கள்.. யார் யார் ?

இந்தியாவில் இணைய ஊடக நிறுவனங்களில் ஒன்றுதான் NEWSCLICK. டெல்லியில் செயல்பட்டு வரும் இந்த ஊடகமானது, ஒன்றிய பாஜக அரசின் தில்லாலங்கடி வேலைகளை மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டி வருகிறது. இதனால் கடுப்பான ஒன்றிய பாஜக அரசு, அந்த நிறுவனத்தின் மீது சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டமான UAPA சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அந்நிறுவனத்தின் ஆசிரியரை கைது செய்துள்ளது.

UAPA சட்டம் என்பது நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது பதியப்படக்கூடிய ஒரு பயங்கர சட்டமாகும். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்களுக்கு ஜாமீன் கூட அவ்வளவு எளிதில் கிடைக்காது. இது போன்ற ஒரு சட்டத்தை பத்திரிகையாளர்கள் மீது ஒன்றிய பாஜக அரசு எளிதாக பயன்படுத்தி வருகிறது. இதே போல் நாடு முழுவதும் கடந்த 2010 முதல் தற்போது வரை சுமார் 16 பத்திரிகையாளர்கள் மீது இந்த வழக்குகள் பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக Free Speech Collective என்ற இணைய ஊடகம் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது.

அதன் பட்டியலை இங்கே காணலாம்..

=> 2010 முதல் இன்று வரை..

* UAPA சட்டத்தின் கீழ் வழக்கு உள்ள பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை - 16

* UAPA சட்டத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை - 07

* UAPA சட்டத்தினால் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை - 08

* UAPA சட்டத்தின் கீழ் வழக்குப் பதியப்பட்டு, கைது செய்யப்படாத பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை - 01

* UAPA சட்டத்தினால் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை - 01

* UAPA சட்டம் பதியப்பட்டு நீக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் எண்ணிக்கை - 01

=> இதில் தற்போது கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் :

1. டெல்லியில், கடந்த 03.10.2023-ல் கைது செய்யப்பட்ட NewsClick ஊடகத்தின் ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தா

=> கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பத்திரிகையாளர்கள் :

1. ஜம்மு மற்றும் காஷ்மீரில் 27.08.2018-ல் கைது செய்யப்பட்ட காஷ்மீர் நரேட்டர் (Kashmir Narrator) பத்திரிகையின் நிருபர் - ஆசிப் சுல்தான்.

2. ஜம்மு மற்றும் காஷ்மீரில் 04.02.2022-ல் கைது செய்யப்பட்ட தி காஷ்மீர் வாலா (The Kashmir Walla) பத்திரிகையின் ஆசிரியர் - ஃபஹத் ஷா.

3. ஜம்மு மற்றும் காஷ்மீரில் 05.01.2022-ல் கைது செய்யப்பட்ட தி காஷ்மீர் வாலா (The Kashmir Walla) பத்திரிகையின் பயிற்சி நிருபர் - சஜ்ஜத் குல்

4. ஜார்கண்டில் 17.07.2022-ல் கைது செய்யப்பட்ட சுதந்திர பத்திரிகையாளர் (independent journalist) - ரூபேஷ் குமார்

5. ஜம்மு மற்றும் காஷ்மீரில் 21.03.2023-ல் கைது செய்யப்பட்ட வந்தே இதழ் (Wande Magazine) ஆசிரியர் - இர்பான் மெஹ்ராஜ்

சித்திக் கப்பன்

=> கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்த பத்திரிகையாளர்கள் :

* உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 2010 பிப்ரவரியில் கைது செய்யப்பட்ட தஸ்தக் (Dastak) பத்திரிகையின் ஆசிரியர் - சீமா ஆசாத்; இவருக்கு 2012 ஆகஸ்டில் ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் மீண்டும் 06.09.2023 அன்று அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

* உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 2010 பிப்ரவரியில் கைது செய்யப்பட்ட தஸ்தக் (Dastak) பத்திரிகையின் ஆசிரியர் - விஷ்வ விஜய்; 2012 ஆகஸ்டில் ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னர் மீண்டும் 06.09.2023 அன்று அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

* அவுட்லுக் (Outlook) பத்திரிகையாளர் - கே கே ஷாஹினா மீது டிசம்பர் 2010-ல் வழக்குப் பதிவு செய்யப்பட்டது; 2011 இல் ஜாமீன் வழங்கப்பட்டது

* ஆழிமுகம் (Azhimukham) பத்திரிகையாளர் - சித்திக் கப்பன் மீது 2020-ல் வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்ட நிலையில், UAPA வழக்கில் 09.09.2022 அன்றும், PMLA (பணமோசடி தடுப்பு சட்டம்) வழக்கில் 23.12.2022 அன்றும் ஜாமீன் வழங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் விடுதலை இவர் செய்யப்பட்டார்.

* தி ஃபிரன்டையர் மணிப்பூர் (The Frontier Manipur) பத்திரிகையின் நிர்வாக ஆசிரியர் - பாயோஜெல் சாயோபா 17.01.2021-ல் கைது செய்யப்பட்ட நிலையில், 18.01.2021 ஜாமீன் வழங்கப்பட்டது

* தி ஃபிரன்டையர் மணிப்பூர் (The Frontier Manipur) பத்திரிகையின் ஆசிரியர் - தீரன் சடோக்பம் 17.01.2021-ல் கைது செய்யப்பட்ட நிலையில், 18.01.2021 ஜாமீன் வழங்கப்பட்டது

* புது தில்லியில் சுதந்திர பத்திரிகையாளர் (independent journalist) - ஷியாம் மீரா சிங் 10.11.2021-ல் கைது செய்யப்பட்டு 17.11.2021 அன்று முன்ஜாமீன் வழங்கப்பட்டது

Also Read: TADA : இந்தியாவின் கொடூர சட்டம்.. பிடுங்கப்பட்ட அடிப்படை உரிமைகள்.. தடை செய்யப்பட்டதன் காரணம் என்ன ?