India
தமிழ்நாட்டு பாணியை பின்பற்றும் தெலங்கானா.. மாநிலம் முழுவதும் காலை உணவுத் திட்டம் தொடக்கம் !
தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சிக்கு வந்து ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 7.5.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விதி 110-ன் கீழ் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என அறிவித்தார்.
அதன்படி தற்போது தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்த மகத்தான திட்டத்தை நாடு முழுவதும் இருந்து பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் ஆங்கில பத்திரிகைகளும் தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்தன.
இந்த திட்டம் மூலம் அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் வருகை எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என ஆய்வு முடிவுகள் தெரிவித்த நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி இந்த திட்டத்தை தங்கள் மாநிலத்தில் தொடங்க வேண்டும் என பல்வேறு அமைப்புகள் சார்பில் அந்தந்த மாநில அரசுகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்னர் முன்னர் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தெலங்கானா முதல்வரின் செயலர் ஸ்மிதா சபர்வால் தலைமையில் 5 அதிகாரிகள் தமிழ்நாடு வந்து ஆய்வு செய்தனர். அதனைத் தொடர்ந்து தெலங்கானா மாநில அரசு காலை உணவு திட்டத்தை தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தவுள்ளதாக அறிவித்தது.
அதன் படி இன்று தெலங்கானா மாநிலத்தின் இந்த திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது. இந்த திட்டத்துக்காக 3400 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 43,000 அரசு பள்ளிகளில் இந்த திட்டம் தொடங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டத்தின் மூலம், 30 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர் எனவும் மாநில அரசு சார்பில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
-
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
வட்டி கொடுக்க முடியாமல் தவிப்பு... பெற்ற குழந்தையை விற்க முயன்ற பெற்றோர் - பீகாரில் அதிர்ச்சி !
-
ஸ்பெயின் அரசர், அரசி மீது சேற்றை வீசிய பொதுமக்கள் : வீடியோ வெளியாகி அதிர்ச்சி... பின்னணி என்ன ?
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !