India
Google Map-ஐ நம்பி கார் ஒட்டிச் சென்ற 2 மருத்துவர்களுக்கு நேர்ந்த சோகம் : நடந்தது என்ன?
நாம் ஒரு இடத்திற்குச் செல்லும்போது வழி தெரியவில்லை என்றால் சாலையில் இருப்பவர்களிடம் கேட்டுக் கேட்டுச் செல்வோம். ஆனால் இப்போது நாம் Google Map உதவியை நாடுகிறோம்.
இப்படி Google Map-ஐ பயன்படுத்திப் பயணிக்கும்போது சில நேரங்களில் தவறான வழியைக் காட்டி, செல்ல வேண்டிய இடத்திற்குப் பதில் வேறு இடத்திற்குச் சென்ற சம்பவம் நம்மில் சிலருக்கு நடத்திருக்கும். அப்படி Google Map பயன்படுத்தி கார் ஓட்டிச் சென்ற ஒருவருக்கு மோசமான ஒரு சம்பவம் சம்பவம் நடந்துள்ளது.
கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்தவர் அத்வைக். அதேபோல் கொடுங்கநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் அஜ்மல். இவர்கள் இருவரும் மருத்துவர்கள். இவர்களது நண்பர்கள் மூன்று சேர்ந்து அத்வைதின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு காரில் கொடுங்கநல்லூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
இவர்கள் Google Mapபை பயன்படுத்து அது சொல்லும் வழியில் கார் ஒட்டி வந்துள்ளனர். இப்படி இவர்கள் எர்ணாகுளம் அருகே வந்தபோது நள்ளிரவு நேரம் என்பதால் சாலைகள் தெளிவாகத் தெரியவில்லை. மேலும் மழையும் பெய்து கொண்டிருந்தது. இதனால் சாலையில்தான் தண்ணீர் தேங்கி இருப்பதாக நினைத்து ஆற்றுக்குள் காரை இறக்கியுள்ளனர்.
இதில் கார் ஆற்றுக்குள் மூழ்கியது. இதுபற்றி அறிந்த அப்பகுதி மக்கள் உடனே போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பிறகு பொதுமக்கள் மற்றும் மீட்பு குழுவினர் இணைந்து காரில் பின்னால் இருந்த மூன்று பேரை உயிருடன் மீட்டனர்.ஆனால் காரில் முன்இருந்த அத்வைக், அஜ்மால் ஆகியோர் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ச்சியாக Google Map பயன்படுத்திச் செல்லும்போது இப்படியான விபத்துகள் ஏற்படுத்துவது அதிகரித்துள்ளன. இதனால் Google Mapயை முழுமையாக நம்பாமல் ஆங்காங்கே பொதுமக்களிடம் நாம் செல்லும் வழி சரிதானா என்பதைக் கேட்டு உறுதி செய்து கொண்டால் இதுபோன்ற இழப்புகள் எதுவும் நடக்காது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்