India
சுட்டுவீழ்த்தப்பட்ட உக்ரைன் ட்ரோன்கள்.. கட்டாய ராணுவ சேர்ப்பை அறிவித்த ரஷ்யா.. தீவிரமடையும் போர் !
ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் தற்போது ஒன்றரை வருடத்தை தாண்டியும் தற்போது உக்கிரமான நடந்து வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான இராணுவ இலக்குகளை ரஷ்யப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களைத் தற்காத்துக்கொள்ள, ரஷ்யப் படைகளுக்குப் பதிலடி கொடுத்து வருகிறது. எனினும் உக்ரைனின் மேற்கு பகுதியில் பெரும்பாலான பகுதிகள் ரஷ்ய கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளன. போர் தொடங்கியதிலிருந்து அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக ஆயுதங்களை வழங்கி வருகின்றன.
இதுதவிர உக்ரைனுக்கு ஆதரவாக ரஷ்யா மீது பொருளாதாரத் தடையும் விதித்துள்ளனர். இத்தனையும் மீறி ரஷ்யா தொடர்ந்து போரைத் தொடர்ந்து வருகிறது. அதேபோல உக்ரைனும் பின்வாங்காமல் தொடர்ந்து ரஷ்யாவை எதிர்த்துப் போரிட்டு வருகிறது.
முதலில் நேரடி மோதலாக தொடங்கிய இந்த போர் தற்போது பெரும்பாலும் ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளின் நவீன ஆயுதங்களின் சோதனைகளமாக மாறியுள்ளது. இதனால் இரு தரப்பிலும் புதிது புதிதான ஆயுதங்கள் இந்த போரில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த போரில் ட்ரோன்களின் பயன்பாடு அதிகளவில் இருந்து வருகிறது.
ரஷ்யா தரப்பில் அதிகளவில் ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில், தற்போது மேற்கத்திய நாடுகளின் உக்ரைனுக்கு ட்ரோன்களை வழங்கி வருகின்றன. இதனால் ரஷ்யாவின் பல பகுதிகள் ட்ரோன் தாக்குதலை சந்தித்து வருகிறது. அந்த வகையில் ரஷ்யாவுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தவிருந்த 9 உக்ரைனிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டு இருப்பதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
இந்த நிலையில், இந்த மாதம் முதல் ராணுவத்துக்கு கட்டாய ஆள்சேர்ப்பு ஆரம்பமாகவுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யா பகுதிகளை தவிர்த்து உக்ரைனிலிருந்து இணைக்கப்பட்ட பகுதிகளுக்கும் இது பொருந்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் கூடுதலாக ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் ரஷ்ய ராணுவத்தில் இணைக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?