India
நிஜ ஹீரோ.. தீ விபத்தில் சிக்கிய 2 வயது குழந்தையின் உயிரை காப்பாற்றிய போலிஸார் : குவியும் வாழ்த்து!
டெல்லி முகர்ஜி நகரில் கட்டண பெண்கள் விடுதி ஒன்று உள்ளது. இந்த கட்டடத்தில் புதனன்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 35க்கும் மேற்பட்ட பெண்கள் சிக்கிக் கொண்டுள்ளனர்.
இது குறித்து உடனே போலிஸார் மற்றும் தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் கட்டத்தில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
மேலும் போலிஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் அறைகளின் ஜன்னல்களை உடைத்துச் சிக்கி இருந்தவர்களைப் பத்திரமாக மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அப்போது 2 வயது பெண் குழந்தை தீயின் நடுவே சிக்கிக் கொண்டது.
இதைக் கவனித்த அஜ்மீர் சிங் என்ற போலிஸார் தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் எரிந்து கொண்டிருந்த கட்டத்திற்குள் சென்று குழந்தையை மீட்டு வெளியே கொண்டுவந்தார். ஆனால் குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தது.
இதனால் உடனே அருகே இருந்த மருத்துவமனைக்குத் தூக்கிக் கொண்டு ஒடி சிகிச்சையில் சேர்த்தார். அப்போது குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை கொடுக்கப்பட்டது. பின்னர் குழந்தை கண்விழித்தது. இதைப்பார்த்து போலிஸார் அஜ்மீர் சிங் உள்ளிட்ட அனைவரும் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதனர்.
பின்னர் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய போலிஸாருக்கு அவரது தாயார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் 2 வயதுக் குழந்தையின் உயிரைக் காப்பாற்றிய போலிஸாருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Also Read
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!