India
தொடரும் மரணங்கள்.. நடனமாடும் போது மாரடைப்பால் உயிரிழந்த 19 வயது இளைஞர்!
குஜராத் மாநிலம் படேல் பார்க் பகுதியைச் சேர்ந்தவர் வினித் மெஹில்பாய். 19 வயது இளைஞரான இவர் நவராத்திரி விழாவை முன்னிட்டு நடன பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
அப்போது, பாடலுக்கு ஏற்றார்போல் நடனமாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதைபார்த்துஅதிர்ச்சியடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு அருகே இருந்து மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
பின்னர் அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு,ஜிஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அங்குப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகக் கூறியுள்ளனர். மேலும் மாரடைப்பால் இறந்ததாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வேதனையுடன் கூறும் வினித் மெஹில்பாய் உறவினர்கள், "19 வயதே ஆகும் அவனுக்கு எந்தவிதமான நோயும் இல்லை. நல்ல உடல் ஆரோக்கியத்தோடே இருந்தான்" என கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்குப் பிறகு இப்படி இளைஞர்கள் பலரும் உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. இதில் ஒன்றிய அரசு கூடுதல் கவனம் செலுத்தி, இதுகுறித்து ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது.
Also Read
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!