India
“மோடி சொல்லட்டும்.. நா என் அப்பா ரோட்டுலதான் ஓட்டுறேன்” - போலீசிடம் வாக்குவாதம் செய்த இளம்பெண்: பின்னணி?
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் அமைந்துள்ளது பாந்த்ரா என்ற பகுதி. இங்கிருந்து ஒர்லி என்ற பகுதி வரை கடலுக்கு மேலே பாலம் ஒன்று (Bandra-Worli Sea Link) கடந்த 2009-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இந்த பாலத்தில் இரு சக்கர வாகனம் செல்ல அனுமதி இல்லை. எனவே இதில் கார்கள் மட்டும் செல்கின்றன. இந்த சூழலில் தற்போது பெண் ஒருவர் இதில் பைக் ஓட்டி சிக்கலில் சிக்கியுள்ளார்.
அதாவது மத்திய பிரதேசத்தில் உள்ள ஜபல்பூர் என்ற பகுதியை சேர்ந்தவர் நுபுர் படேல் (27). கட்டடக்கலை நிபுணரான இவர், பூனே வில்ல தனது தம்பியை காண புல்லட் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது இந்த பாலத்தில் அந்த பெண் ஹெல்மெட் இல்லாமல் பயணித்துள்ளார். இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பட்டது.
உடனே சம்பவ இடத்துக்கு விரைந்த அவர்கள், நுபுரை தடுத்து விசாரித்தனர். மேலும் இங்கே பயணிக்க கூடாது என்றும் கூறினர். போலீசார் பேச்சால் இந்த பெண் அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். மேலும் "என்ன தடுக்க நீங்க யாரு.. இது எனது அப்பா ரோடு. நானும் வரி கட்டுகிறேன்.. என்னை யாரும் தடுக்க முடியாது.." என்று கோபத்தோடு பேசினார்.
தொடர்ந்து "ஒருவேளை மோடி சொன்னால், அப்போது எனது வண்டியை நிறுத்துகிறேன்.. அவருக்கு போன் செய்யுங்கள்" என்று வாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவரது பைக்கை போலீசார் பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது மேலும் கோபமடைந்த அந்த பெண், "என் வண்டி மீது கை வைத்தால் கையை வெட்டுவேன்.." என்றும் ஆக்ரோஷமாக கூறினார்.
அதோடு தனது பைக்கை நடு பாலத்தில் நிறுத்தி விட்டு, மற்ற வாகனங்கள் செல்ல இடையூறு செய்தார். தொடர்ந்து போலீசாருடன் தகராறு வாக்குவாதத்தில் அந்த பெண் ஈடுபட்டார். இதனால் வேறு வழியின்றி போலீசார் அந்த பெண்ணை கைது செய்ததோடு, அவரது வண்டியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரை காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்ததில், அவர் தனது சகோதரரை காண சென்றுகொண்டிருந்தது தெரியவந்தது.
இந்த நிகழ்வால் அந்த பெண் மீது 353 (அரசு ஊழியரை அவரது கடமையைச் செய்யவிடாமல் தடுக்க தாக்குதல்), 186 (அரசு ஊழியரின் பொதுப் பணிகளைச் செய்வதில் தானாக முன்வந்து தடை செய்தல்), 279 (தாறுமாறாக வாகனம் ஓட்டுதல்), 336 (மற்றவர்களின் உயிருக்கு அல்லது தனிப்பட்ட பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிக்கும் செயல்), 129 (ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல்) உள்ளிட்ட பிரிவுகள் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பெண், அந்த பாலத்தில் வண்டி ஓட்டிவரக்கூடாது என்பதை தெரியாமல் செய்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?