India

இல்லாத ரயில் நிலையத்தை புகழ்ந்து பேசிய பிரதமர் மோடி.. ஷாக்கான மத்திய பிரதேச மக்கள் : வைரலாகும் வீடியோ!

மத்திய பிரதேச மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தேர்தல் தேதி இன்றும் அறிவிக்கப்படாத நிலையில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் தீவிரமாக பிரச்சாகரம் செய்ய தொடங்கிவிட்டனர்.

மீண்டும் ஆட்சியைத் தக்க வைக்க பா.ஜ.க இப்போதில் இருந்தே தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. இதேபோல் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை பிடித்தே தீருவோம் என உறுதியுடன் பிரச்சாரம் செய்து வருகிறது.

மேலும் 2024ல் நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாகவும் மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தல் பார்க்கப்படுகிறது. இதனால் இரண்டு கட்சிகளும் தங்களது தேர்தல் பணிகளைத் தொடங்கி வேகமாகச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், போபாலில் பா.ஜ.க தேர்தல் களப் பணியாளர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், போபாலில் உள்ள ராணி துர்காவதி ரயில் நிலையத்தைக் கொண்டு வந்ததற்காக அம்மாநில பா.ஜ.க அரசின் முயற்சிக்குப் பாராட்டுத் தெரிவித்துப் பேசினார்.

ஆனால், போபாலில் ராணி துர்காவதி என்கிற பெயரில் ரயில் நிலையமே இல்லை என்பது தான் உண்மை. இதனால் இணையவாசிகள் பலரும் பிரதமர் பேசிய காணொளியை சமூகவலைதளங்களில் வைரலாக்கி ஒரு நாட்டின் பிரதமரே பொய் பொய்யாக இப்படி பேசலாமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் சிலர் பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பா.ஜ.க கட்சியின் பிரதமர் எப்படி உண்மையா? பேசுவார். இப்படிப் பொய்தான் பேசுவார் என விமர்சித்துள்ளனர். இப்படி பலரும் பிரதமர் மோடி பேச்சுக்குக் கிண்டலடித்து வருகின்றனர்.

Also Read: மக்களுக்கு பாதுகாப்பில்லாத உ.பி : பா.ஜ.க ஆட்சியில் கடந்த 15 நாட்களில் நடந்த கொடூரங்கள்!