India

”சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ஏன் பயப்படுகிறீர்கள்?”.. பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி MP கேள்வி!

சத்தீஸ்கர் மாநிலத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ், பா.ஜ.க கட்சிகள் தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முன்பே தங்களது பிரச்சாரங்களைத் தொடங்கி விட்டனர். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க தலைவர்கள் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்தில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பிலாஸ்பூரில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய ராகுல் காந்தி, "2011ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு சாதியினரின் தரவுகள் உள்ளது. ஆனால் இதை மோடி அரசு மக்களுக்குக் காட்டவில்லை. ஒன்றிய அரசுத்துறையின் செயலாளர்களில் 90 பேரில் 3 பேர் மட்டுமே ஓ.பி.சி பிரிவை சேர்ந்தவர்கள்.

சாதிவாரி கணக்கெடுப்புதான் இந்தியாவின் எக்ஸ்ரேவாக இருக்கும். எஸ்.சி, எஸ்.டி மற்றும் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிய முடியும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதற்குப் பிரதமர் மோடிக்கு என்ன பயம்?

நாங்கள் தொடங்கும் திட்டங்கள் ஏழைமக்கள் பயன்பெறுகிறார்கள். ஆனால் பா.ஜ.க தொடங்கும் திட்டங்களால் அதானி பயன்பெறுகிறார். துறைமுகங்கள், விமான நிலையங்கள் அதானிக்கு விற்கப்படுகிறது" என தெரிவித்துள்ளார்.

Also Read: நாட்டுக்கே அவமானமாய் திகழும் டெல்லி பாஜக எம்.பிக்கள்.. கௌதம் கம்பீர் முதல் ரமேஷ் பிதுரி வரை !