India
சட்டென்று நின்ற துடிப்பு.. சுருண்டு விழுந்த இளைஞர்.. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் சோகம் !
ஆண்டுதோறும் இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவது வழக்கம். இந்த நாளில் மக்கள் விநாயகருக்கு பூஜை செய்து விட்டு தாங்கள் வழிபட்ட சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பர். அந்த வகையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி கடந்த 18-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த கொண்டாட்டம் நீடித்து வரும் நிலையில், இந்த நிகழ்வில் சோகம் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
ஆந்திரா மாநிலம் ஸ்ரீசத்ய சாய் என்ற பகுதியில் அமைந்துள்ளது தர்மவரம் என்ற கிராமம். இங்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த சூழலில் நேற்று கொண்டாடப்பட்ட விழாவில் 2 இளைஞர்கள் நடனமாடி கொண்டிருந்தனர். அவர்கள் ஆட்டத்தை அக்கம்பக்கத்தினர் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர். அப்போது திடீரென ஆடிக்கொண்டிருந்த இளைஞரில் ஒருவர் திடீரென சட்டென்று கீழே விழுந்துள்ளார்.
இதனை கண்டதும் அருகில் இருந்தவர்கள் பதற்றத்தில் அவரை தூக்கி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள், இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை கேட்டு அவரது உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த இளைஞர் பெயர் பிரசாத். அவருக்கு வயது 27 ஆகும். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அண்மைக்காலமாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நேற்று உத்தர பிரதேசத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவர் வகுப்பறையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!