India
நீங்கள் அறிவியலை கொண்டாடும் அழகு இதுதானா ? : மக்களவையில் பா.ஜ.கவினரை கதறவிட்ட ஆ.ராசா MP!
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் செப். 18 ஆம் தேதி தொடங்கியது. வரும் செப் 22-ம் தேதி வரை இக்கூட்டத் தொடர் நடைபெறுகிறது. முதல்நாள் கூட்டத் தொடர் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றது. நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால விவாதத்தில் அனைத்து கட்சி எம்.பி-களும் பங்கேற்று உரையாற்றினர்.
இதனைத் தொடர்ந்து நேற்று பழைய நாடாளுமன்ற கட்டடத்திற்குப் பிரியா விடை கொடுக்கப்பட்டு, புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் கூட்டத்தொடர் தொடங்கியது. அன்றைய தினமே சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தலில் மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவை ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் தாக்கல் செய்தார்.
இதையடுத்து மகளிர் இட ஒதுக்கீடு மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. பின்னர் விவாதம் முழுமையாக முடிவடைந்த பிறகு நேற்று மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா மக்களவையில் 454 உறுப்பினர்கள் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.
இன்று சந்திரயான் 3 திட்டம் வெற்றி தொடர்பான விவாதம் நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர். தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசும் போதும்," சந்திரயான் வெற்றி பல்வேறு விதமான புனைவு கதைகள் உண்மையில்லை என்பதை நிரூபித்துள்ளது.
மயில்சாமி அண்ணாதுரை, சிவன், வீரமுத்துவேல் ஆகியோர் சந்திரயான் வெற்றிக்கு பெரும் பங்காற்றியுள்ளனர்.மூவரும் பிரபலமான கல்லூரிகளில் படித்தவர்கள் அல்ல. அரசுப் பள்ளிகளிலும் அரசுக் கல்லூரியிலும் பயின்றவர்கள். அவர்களுக்கு இந்தியோ சமஸ்கிருதமோ தெரியாது. தமிழும் ஆங்கிலமும் மட்டும்தான் தெரியும். தமிழ்நாட்டின் சாதாரண பகுதிகளிலிருந்து, பிற்படுத்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள். இந்த பெரும் உயரத்தை எட்டியுள்ளனர்.
நிலவில் சந்திரயான் தரையிறங்கியிருப்பதை ஒரு பக்கம் பிரதமர் கொண்டாடுகிறார். அதே நேரத்தில் அறிவியலுக்கு சற்றும் சம்மந்தம் இல்லாத குலக்கல்வி திட்டமான 'விஸ்வகர்மா யோஜனா திட்டம்’ கொண்டு வருகிறார். இது தான் நீங்கள் அறிவியலை கொண்டாடும் அழகா?. நிலவில் தரையிறங்கிய எந்த நாடும் உங்களைப்போல் மதம் சார்ந்து பெயர் சூட்டவில்லை. நீங்களும் இதை கருத்தில்கொண்டு சந்திரயான் -3க்கு விக்ரம் சாராபாய் பெயரை சூட்டுங்கள்" என தெரிவித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!