India
”எந்த சிறப்பும் இல்லாத ஒரு கூட்டத் தொடர் இது” : பிரதமர் மோடி முன்பே விமர்சித்த டி.ஆர்.பாலு MP!
5 நாட்கள் நடைபெறும் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. இன்று ஒருநாள் மட்டும் பழைய நாடாளுமன்ற கட்டத்தில் கூட்டம் நடைபெறுகிறது. நாளையிலிருந்து வரும் 22ம் தேதி வரை புதிய நாடாளுமன்ற கட்டத்தில் கூட்டம் நடைபெறுகிறது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாறு குறித்த விவாதத்தைப் பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்து உரையாற்றினார். பின்னர் எதிர்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.
இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற தி.மு.க குழு தலைவர் டி.ஆர்.பாலு, "இந்த கூட்டத் தொடருக்குப் பெயர் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர். ஆனால் அப்படி எந்த சிறப்பும் இல்லை. ஒன்றிய அரசுக்கு கடும் நிதி நெருக்கடி இருக்கும் போது புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டி அரசுப் பணம் வீணாகச் செலவழிக்கப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற கட்டடம் அவசரமாகத் திறந்து வைக்கப்பட்டது. கடந்த கூட்டத் தொடர் ஏன் அங்கு நடத்தப்படவில்லை. தற்போது ஏன் புதிய நாடாளுமன்றத்தில் கூட்டத் தொடர் நடத்தப்படுகிறது. இந்த கூட்டத் தொடர் நாடாளுமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாற்றை நினைவு கூறுவதற்கு என்று சொல்கிறார்கள்.
அப்படியென்றால், கடந்த ஆண்டுதானே இந்த கூட்டத் தொடரை நடத்தி இருக்க வேண்டும். நாம் இப்போது 76வது ஆண்டில் அடியெடுத்து வைத்துவிட்டோம். சரி அப்படியே நீங்கள் சொல்வது படிபார்த்தோலும் பல வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த நாடாளுமன்றத்தில்தான் நீங்கள் கூட்டத் தொடரை முழுமையாக நடத்தவேண்டும். ஏன் புதிய நாடாளுமன்றத்தில் கூட்டத் தொடரை நடத்துகிறீர்கள். இதில் என்ன ரகசியம் இருக்க?
1962ம் ஆண்டு முதல் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நாட்டிற்காக தங்களது மகத்தான பங்களிப்பைச் செய்துள்ளனர். பேரறிஞர் அண்ணா மாநிலங்களின் உரிமைக்காகவும், தமிழ் போன்ற பல்வேறு செம்மொழிகளின் பாதுகாப்புக்காகவும் வளர்ச்சிக்காகவும் குரல் கொடுத்துள்ளார்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 46,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?