India
கையை பிளேடால் அறுத்துக் கொண்ட 14 மாணவிகள்.. விசாரணையில் கர்நாடகா போலிஸ் ஷாக்!
கர்நாடகா மாநிலம் பெங்களூரு அடுத்த தண்டேலியா பகுதியில் உள்ள பள்ளியில் படிக்கும் 9ம் வகுப்பு மாணவிகள் சிலர் கையில் வெட்டுக் காயத்துடன் வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவர்களது பெற்றோர்கள் விசாரித்தபோது ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை கூறியுள்ளனர்.
மேலும் ஒரே நேரத்தில் 14 மாணவிகள் பள்ளியில் கையை பிளேடால் அறுத்துக் கொண்டது தெரியவந்தது. இதுபற்றி அறிந்த போலிஸார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை செய்துள்ளனர். இதில் தங்களுக்கு எதுவும் தெரியாது என்றும் மாணவிகள் வெவ்வேறு காரணங்களைக் கூறுகின்றனர். இதனால் சரியாக என்ன நடந்தது என்று தெரியவில்லை கூறியுள்ளனர்.
பின்னர் போலிஸார் மாணவிகளிடம் விசாரித்துள்ளனர். அப்போது விளையாடும் போது ஏற்பட்ட டாஸ்க் அடிப்படையில் கையை அறுத்துக் கொண்டது தெரியவந்ததுள்ளது. இருப்பினும் மாணவிகள் எந்த மாதிரியான விளையாட்டை விளையாடினார்கள் அல்லது இதற்குப் பின் வேறு காரணங்கள் இருக்கிறதா? என்பது குறித்து போலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!
-
”டங்கஸ்டன் கனிம சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கவில்லை” : தமிழ்நாடு அரசு விளக்கம்!
-
”அதானியை உடனே கைது செய்ய வேண்டும்” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தல்!