India

வீட்டை காலி செய்ய மூத்த அதிகாரி தொடர் தொல்லை.. கடிதம் எழுதி வைத்து பெண் காவலர் எடுத்த விபரீத முடிவு !

பீகார் மாநிலம் சமஸ்திபூர் என்ற மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அர்ச்சனா குமாரி என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி சுமன் குமார் என்ற கணவர் இருக்கும் நிலையில், அவரும் காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் சுமன் குமார் கடமை தவறுதல் குற்றத்திற்காக கடந்த பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தார்.

இதனால் இருவருமே மன உளைச்சலில் இருந்துள்ளனர். இந்த சமயத்தில் அவருக்கு மேலதிகாரி மூலம் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. அதோடு அவர்கள் குடியிருந்த அரசு குடியிருப்பு வீட்டையும் காலி செய்யவேண்டும் என்று தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் அவரது கணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை சுட்டிக்காட்டி தொடர் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இதனால் மேலும் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்த பெண் காவலர் அர்ச்சனா குமாரி, நேற்று தான் பணிபுரிந்து வந்த காவல் நிலையத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது தற்கொலைக்கு காரணம் தன்னுடைய மேலதிகாரி நயன் குமார் தான் என்று கடிதம் எழுதி வைத்து இந்த தற்கொலை செய்துகொண்டார்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்து மேலதிகாரிகளுக்கு தெரியவரவே, அவர்கள் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி, இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலையத்தில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குடும்ப விவகாரம் அல்லது வேறு ஏதேனும் பிரச்சனை காரணமாக “மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக அரசின் சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 எண்ணை அழைத்து, இலவச கவுன்சிலிங் பெறலாம்.”

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கழக நிகழ்வுகள் மற்றும் இன்றைய முக்கிய செய்திகள் என அனைத்து செய்திகளை உடனுக்கு உடன் அறிய கலைஞர் செய்திகள் இணையதளத்தில் தெரிந்துக்கொள்ளலாம்!

Also Read: விடாத மாமியார் மோதல்.. விபரீத முடிவெடுத்த பெண் வழக்கறிஞர்.. வழக்குகளை புறக்கணித்த சக வழக்கறிஞர்கள் !