India

”2000 ஆண்டுகளாக சாதிய பாகுபாடு உள்ளது”.. உண்மையை ஒப்புக்கொண்ட RSS தலைவர் மோகன் பகவத்!

சனாதனம் குறித்து நாடு முழுவதும் விவாதங்கள் நடந்து வரும் நிலையில் 2000 ஆண்டுகளாக சாதிய பாகுபாட்டை இருப்பதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய மோகன் பகவத், "நமது சமூக அமைப்பில் நாம் சக மனிதர்களைப் பின்தங்கிய நிலையில் வைத்துள்ளோம். அவர்களை நாம் பொருட்படுத்துவதில்லை.

2000 ஆண்டுகளாக இது தொடர்கிறது. அவர்களுக்குச் சமத்துவம் அளிக்கும் வகையில் சில சிறப்புச் சலுகைகள் கொடுக்க வேண்டும். அதில் ஒன்றுதான் ஒட ஒதுக்கீடு. பாதுகாடுகள் இருக்கும் வரை இட ஒதுக்கீடு தொடர வேண்டும். அரசியல் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள இட ஒதுக்கீட்டிற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பு ஆதரவு தெரிவிக்கிறது" என தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் இடஒதுக்கீடு கோரி மராத்தா சமூகத்தினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இட ஒதுக்கீடு குறித்து மோகன் பகவத் கருத்து தெரிவித்துள்ளார்.

அதேபோல் சனாதனம் குறித்து தமிழ்நாட்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேசிய கருத்தை திரித்து பா.ஜ.கவினர் நாடுமுழுவதும் சர்ச்சைகளை எழுப்பி வரும் நிலையில், நாட்டில் 2000 ஆண்டுகளாக சாதியப் பாகுபாடு உள்ளது என்பதை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் ஒப்புக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மணிப்பூர் : தடுப்புகளை நீக்க ஊர்வலம் சென்ற போராட்டகாரர்கள்.. தாக்குதல் நடத்திய பாதுகாப்பு படையினர் !