India
வன்கொடுமையை தடுக்க முயன்ற விமான பணிப்பெண் கொலை.. கொலையாளியின் வாக்குமூலத்தால் அதிர்ச்சி !
சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் ரூபால் ஓக்ரே (Rupal Ogrey). 22 வயது இளம்பெண்ணான இவர் மும்பையின் ஏர் இந்தியா விமானத்தில் பணிப்பெண்ணாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சேர்ந்தார். பயிற்சி விமான பணிப்பெண்ணாக இருக்கும் இவர், மும்பையின் அந்தேரி பகுதியில் அமைந்துள்ள தனது சகோதரியின் அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி இருந்தார்.
இந்த சூழலில் கடந்த 8 நாட்களுக்கு முன்னர் அவரது சகோதரியும், சகோதரியின் காதலரும் ஊருக்கு சென்றதால், இவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது இரண்டு நாட்களாக அவர் போன் ஏதும் எடுக்காததால் அவரது சகோதரி தனது தோழிக்கு இது குறித்து கூறியுள்ளார். அதன்படி அந்த பெண் ரூபால் வீட்டுக்கு சென்று பார்த்தபோது, வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.
உடனே இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து மாற்று சாவியை பயன்படுத்தி வீட்டை திறந்தனர். அப்போது அங்கே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் இளம்பெண் ரூபால் ஓக்ரே சடலமாக கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் உடனடியாக அவரது உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் து அங்கிருக்கும் சிசிடிவி காட்சியை ஆய்வு செய்கையில், அங்கு துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வரும் விக்ரம் அத்வால் என்பவர்தான் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரிடம் விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.
சம்பவத்தன்று ப்புரவு தொழிலாளி விக்ரம் குப்பையை எடுக்கும் நோக்கத்தில் ரூபல் வீட்டு கதவை தட்டியபோது அவர் தனியே இருப்பது தெரியவந்தது. உடனே பாத்ரூம் பைப்பில் கசிவு இருப்பதாக கூறி வீட்டினுள் நுழைந்தவர், பாத்ரூமுக்குள், ரூபல் நுழைந்த போது அவரை பாலியல் வன்கொடுமை செய்ய விக்ரம் முயன்றுள்ளார்.
ஆனால், இதனை ரூபல் எதிர்த்து விக்ரமை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த விக்ரம் தான் கொண்டுவந்த கத்தியால் ரூபலின் கழுத்தை அறுத்து கொலை செய்து, தனது உடை மற்றும் கத்தியில் இருந்த ரத்தத்தை சுத்தம் செய்து கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!