India
“நா இங்க சரணடைய வந்துருக்கேன்.. என்னை சுட்டுறாதீங்க..” - வாசகத்தோடு போலீஸ் ஸ்டேஷன் வந்த விநோத குற்றவாளி !
உத்தர பிரதேச மாநிலம் மஹுலி (Maholi) என்ற பகுதியை சேர்ந்தவர் அமர்ஜித் செளகான். கல்லூரி மாணவரான இவர் கடந்த பிப்ரவரி மாதம் 20-ம் தேதி, கல்லூரியிலிருந்து தனது பைக்கில் திரும்பிக் கொண்டிருந்தபோது, ஒரு பாலம் அருகே 2 பேர் மடக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டி தன்னிடம் இருந்த, பணம் செல்போன் உள்ளிட்டவைகளை வழிப்பறி கொள்ளையடித்து விட்டு சென்றதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவரில் ஒருவர் பெயர் அங்கித் வர்மா என்று தெரியவந்தத்த்து. தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்த அந்த 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர். மேலும் அந்த குற்றாவளியின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் எனவும் போலீசார் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியானது.
இதனால் எங்கே தனது உயிருக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று நினைந்த குற்றவாளி அங்கித் வர்மா, நேற்றைய முன்தினம் (செவ்வாய்க்கிழமை) போலீசில் சரணடைய வந்தார். அவ்வாறு வந்த அவர் "நான் சரணடைய வந்திருக்கிறேன்.. என்னை சுட்டு விடாதீர்கள்.." என்று சிலேட்டில் இந்தியில் எழுதப்பட்ட வாசகத்தோடு, கத்திகொண்டே போலீசில் சரணடைந்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ புகைப்படங்கள் வெளியாகி அனைவர் முன்பும் நகைப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேசத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு புல்டோசர் கலாசாரம் வளர்வதோடு சேர்ந்து சிறு குற்றங்களுக்கும் என்கவுண்டர் நடைபெற்று வருகிறது.
இதனால் பொதுமக்கள் உயிருக்கும் பெரும் ஆபத்து இருக்கிறது. இதனால் சமூக ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகள் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் அங்கிருக்கும் சிறுபான்மையினரான இஸ்லாமிய மக்களும் இதனால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். மணிப்பூர் வன்முறையில் கூட இதே புல்டோசர் கலாச்சாரத்தை பயன்படுத்தியதால், அதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?