India
லாரி இடித்தில் சொந்த டிராக்டர் சக்கரத்தில் சிக்கிய இளைஞர்.. 500மீ இழுத்து செல்லப்பட்டு உடல் நசுங்கி பலி !
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ஹோஷியார்பூர் பகுதியை அடுத்து அமைந்துள்ளது பங்லான் கேரா என்ற கிராமம். இங்கு சுக்தேவ் சிங் என்ற 21 வயது இளைஞர் விவசாயம் செய்து வருகிறார். எனவே இவர் தனக்கென்று ஒரு டிராக்டர் ஒன்றையும் வைத்துள்ளார். அதில் மணல் உள்ளிட்டவையை அல்ல பயன்படுத்தி வந்துள்ளார். அந்த வகையில் நேற்று (சனிக்கிழமை) தனது டிராக்டரில் ஷாபூர் பகுதியில் மணலை அள்ளிக்கொண்டு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அவருக்கு பின்னால் கல் நொறுக்கும் இயந்திரம் ஏற்றப்பட்ட லாரி ஒன்று வந்துள்ளது. அவ்வாறு வந்து கொண்டிருந்தபோது திடீரென அந்த டிராக்டர் மீது சட்டென்று இடித்துள்ளது. இதில் நிலைதடுமாறிய சுக்தேவ் சிங் கீழே விழ, அவரது டிராக்டர் சக்கரத்திலே நசுங்கினார். அவ்வாறு தனது வாகனத்தில் சிக்கிய அவரை, அந்த வாகனம் நில்லாமல் சுமார் 500 மீ தூரம் வரை இழுத்து சென்றது.
இதில் நிலைகுலைந்த நிலையில், உடல் பகுதிகள் நசுங்கி சம்பவ இடத்திலேயே சுக்தேவ் சிங் பரிதாபமாக பலியானார். இதனை கண்ட அந்த பகுதிவாசிகள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், அங்கிருந்து தப்பியோடிவிட்டார். தொடர்ந்து தகவலின் பேரில் விரைந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் தப்பியோடிய லாரி ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் நடு ரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை சமாதானம் செய்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாரி இடித்ததில், டிராக்டர் ஓட்டுநர் தனது வாகனத்திலேயே சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!