India

'சந்திரயான் 3' லேண்டரை நான்தான் வடிவமைத்தேன்.. ஊடகங்கனை ஏமாற்றிய குஜராத்காரர்.. விசாரணையில் அதிர்ச்சி !

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.

அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது. 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது.

அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது 'சந்திரயான் 3' விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த 'சந்திரயான் 3' விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. அதிலிருந்து பிரிந்த விக்ரண் லேண்டர் சில நாட்களுக்கு முன்னர் வெற்றிகரமான நிலவில் தரையிறக்கப்பட்டது. இதனை இஸ்ரோ மையத்தில் இருந்து விஞ்ஞானிகள் ஆரவாரத்தோடு கொண்டாடினர்.இதன் மூலம் ரஷ்யா, அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்தபடியாக நிலவில் கால் பதித்த நாடு என்ற பெருமையை இந்தியா படைத்துள்ளது.

இந்த நிலையில், நிலவில் தரையிரங்கிய சந்திரயான் 3 விண்கலத்தின் லேண்டரை வடிவமைத்தது நான்தான் எனக் கூறி உள்ளூர் ஊடகத்தை குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஒருவர் ஏமாற்றிவந்தது தெரியவந்தது. குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்த மிதுல் திரிவேதி என்பவர் விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கியது குறித்த செய்தி ஊடகங்களில் ஒளிபரப்பானபோது அதில் கலந்துகொண்டு தான்தான் லேண்டரை வடிவமைத்ததாக கூறி வந்துள்ளார்.

மேலும்,அவர் பிஎச்டி பட்டம் பெற்று, இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்ததாகவும் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி தான் சந்திரயான் 2 திட்டத்திலும் பணியாற்றியதால் தன்னை சந்திரயான் 3 திட்டத்திலும் பணியாற்றுமாறு இஸ்ரோ அழைத்ததாகவும், அதில் பல மாற்றங்களை செய்ததால்தான் அது வெற்றிகரமாக நிலவில் இறங்கியதாகவும் கூறிவந்துள்ளார்.

இவரின் பேட்டியால் சந்தேகமடைந்த சிலர் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்படி போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தியபோது அவர் ஒரு பிகாம் பட்டதாரி என்பவர் சந்திரயான் 3 விண்கலம் குறித்து ஊடகங்களிடம் தொடர்ந்து பொய் கூறி வந்ததும் தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த போலிஸார் இது குறித்து அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Also Read: "வரலாறு உங்களை கனிவோடு மதிப்பிடாது" - பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கை விமர்சித்து ராஜினாமா செய்த MP !