India
சந்திரனைத் தொடர்ந்து சூரியன் : குறிவைத்த இஸ்ரோ.. செப்.02-ல் விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்1 விண்கலம் !
நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008ம் ஆண்டு 'சந்திரயான் 1' கலத்தை 386 கோடி ரூபாய் செலவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது.
அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் 603 கோடி ரூபாய் செலவில் 'சந்திரயான் 2' விண்கலம் உருவாக்கப்பட்டது. இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் 'விக்ரம்' என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது. 'சந்திரயான் 2' வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிரக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது.
அதனைத் தொடர்ந்து அதன் தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு தற்போது 'சந்திரயான் 3' விண்கலம் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த 'சந்திரயான் 3' விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. அதிலிருந்து பிரிந்த விக்ரண் லேண்டர் கடந்த 23-ம் தேதி மாலை 6.03 மணிக்கு வெற்றிகரமான நிலவில் தரையிறக்கப்பட்டது.
இந்த சாதனையைத் தொடர்ந்து அடுத்ததாக இஸ்ரோ அமைப்பு சூரியனை ஆய்வு செய்ய குறிவைத்துள்ளது. அதனைத் தொடர்ந்து அது குறித்த ஆய்வு செய்ய விண்கலத்தை அனுப்ப இஸ்ரோ நீண்ட நாள் தயாரிப்பில் ஈடுபட்டு வந்தது. இந்த நிலையில், சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து ஆதித்யா எல் 1 திட்டத்தை இஸ்ரோ செயல்படுத்தவுள்ளது.
இதற்காக ஆதித்யா எல் 1 என்று பெயரிட்டுள்ள விண்கலத்தை விண்ணில் செலுத்த இருப்பதாக இஸ்ரோ ஏற்கனவே அறிவித்து இருந்த நிலையில், ஆதித்யா எல் 1 விண்கலம் செப்டம்பர் 2-ம் தேதி விண்ணில் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பி.எஸ்.எல்.வி - C57 ராக்கெட் மூலம் இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ கூறியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!