India
”காசு கொடுத்து வாங்க முடியாதவர்கள் வெங்காயத்தை சாப்பிடாதீர்கள்”.. மகாராஷ்டிர அமைச்சர் சர்ச்சை கருத்து!
இந்தியாவில் கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில்தான் வெங்காயம் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால் இந்த ஆண்டு மழைப்பொழிவால் விளைச்சல் குறைந்தது. மேலும் மற்ற மாநிலங்களுக்கான வரத்தும் குறைந்து காணப்பட்டது.
ஆகையால், வெங்காயத்தின் விலை விண்ணைத் தொடும் வகையில் உயர்ந்ததால் இல்லத்தரசிகளின் கண்களில் வெங்காயத்தை உரிப்பதற்கு முன்பே கண்ணீர் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு கிலோ பெட்ரோலுக்கு இணையாக ஒரு கிலோ வெங்காயம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வெங்காய விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் வெங்காய ஏற்றுமதிக்கு 40% வரி விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரி விதிப்பு டிசம்பர் 31 வரை நடைமுறையில் இருக்கும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
இந்த முடிவுக்கு விவசாயிகள் மற்றும் வணிகர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் தடா பூஸ்"காசு கொடுத்து வெங்காயம் வாங்க முடியாதவர்கள் நான்கு மாதங்களுக்கு வெங்காயத்தை சாப்பிடாமல் இருங்கள்" என பேசியதுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரின் இந்த பேச்சுக்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது.
Also Read
-
திருப்பெரும்புதூரில் ESI மருத்துவமனை அமைக்க அனுமதி - TR.பாலு MP-யின் தொடர் முயற்சிகளுக்கு வெற்றி !
-
"இரட்டை நாக்கு படைத்தவர்களுக்கு பதில் சொல்ல தேவையில்லை" - அமைச்சர் சேகர் பாபு விமர்சனம் !
-
“7 மலைக்குன்றுகள், 200 இயற்கை நீர்ச்சுனைகள் அழிந்து போகும்!” : ஒன்றிய அரசுக்கு வைகோ கண்டனம்!
-
கூட்டாட்சி தத்துவத்தை உறுதிசெய்யும் இந்திய அரசியலமைப்பு : முரசொலி தலையங்கம்!
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!