India
மெசேஜ் அனுப்பியதால் ஆத்திரம்.. தாயை கோடாரியால் கொலை செய்த மகன்.. கொடூரத்தின் பின்னணி என்ன ?
மகாராஷ்டிரா மாநிலம் பால்கர் பகுதியில் வசாய் டவுன்ஷிப்பில் அமைந்துள்ளது பரோல் என்ற பகுதி. இங்கு சோனாலி கோக்ரா என்ற 35 வயது பெண் ஒருவர் தனது 17 வயது மகனுடன் வசித்து வந்துள்ளார். பல ஆண்டுகளாக இல்லாமல் திடீரென தாய் மீது சந்தேகம் வந்துள்ளது. மேலும் தனது தாய் அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துவதால் யாருடனோ தொடர்பில் உள்ளாரோ என்று மகன் சந்தேகித்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது. எனினும் மகன், தனது தாயை கண்காணிப்பதை நிறுத்தாமல் தொடர்ந்துள்ளார். இந்த சூழலில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மகனுக்கு உணவு பரிமாறும்போது திடீரென தாய் சோனாலியின் மொபைல் போனுக்கு மெசேஜ் வந்துள்ளது. எனவே சோனாலி மொபைல் போனை எடுத்து பயன்படுத்தியுள்ளார்.
இதனை கண்டு எரிச்சலடைந்த மகன், தாயிடம் மொபைல் போனை பயன்படுத்த வேண்டாம் என்று கத்தி மிரட்டியுள்ளார். ஆனால் தாய் அதனை கேட்கவில்லை என்ற ஆத்திரத்தில் அவரை தாக்கியுள்ளார். இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அருகில் இருந்த கோடரியை எடுத்து தாயை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் சோனாலி கத்தி கூச்சலிடவே அக்கம்பக்கத்தினர் வந்தனர்.
அவர்கள் வந்து பார்க்கையில் சோனாலி இரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள், உடனே மருத்துவமனைக்கு கூட்டி சென்றனர். அங்கே பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் விரைந்த அவர்கள், உயிரிழந்த சோனாலியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்ததோடு, கொலை செய்த மகனையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மெசேஜ் அனுப்பியதால் தாயை, மகனே கோடாரியால் தாக்கி கொலை செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !