India
ஆட்டோவில் சென்ற ஆசிரியர்.. விலை உயர்ந்த iPhoneஐ பறித்து சென்ற இரண்டு வாலிபர்கள்: காட்டிக் கொடுத்த CCTV!
டெல்லியில் உள்ள கியான் பார்தி பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் யோவிகா சவுத்ரி. இவர் பள்ளி முடித்து விட்டு தியோலியில் உள்ள தனது வீட்டிற்கு ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் திடீரென இவரது கையிலிருந்த விலை உயர்ந்த செல்போனை பறிக்க முயற்சி செய்தனர். ஆனால் அவர் செல்போனை விடாமல் பிடித்துக் கொண்டிருந்தார்.
இதனால் அவர் ஆட்டோவில் இருந்து கீழே விழுந்துள்ளார். பலத்த காயம் அடைந்ததால் அவரிடம் இருந்த செல்போனை இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தில் முகத்தில் பலத்த காயத்துடன் யோவிகா சவுத்ரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர் கொடுத்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்களுக்கு 20 முதல் 22 வயத்துக்குட்ட இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதில் கிடைத்த அடையாளங்களைக் கொண்டு இருவரையும் பிடிக்க போலிஸார் தீவிரமாகத் தேடிவருகின்றனர்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!