India
அம்பலமான பா.ஜ.கவின் முறைகேடுகள்.. ஒவ்வொரு திட்டத்திலும் மோசடி: புட்டுப்புட்டு வைத்த CAG அறிக்கை!
நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெற்றது. இக்கூட்டத் தொடரின் மணிப்பூர் வன்முறை குறித்த விவாதத்திற்கு இடையே 23 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பல்வேறு திட்டங்கள் தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையின் மூலம் பா.ஜ.க அரசின் பல்வேறு ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
1. ஒரு கிலோ மீட்டருக்கு 18 கோடியாக இருந்த துவாரகா துரித நெடுஞ்சாலை செலவு ரூ.250 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. முதலில் இத்திட்டத்தின் செலவு ரூ.528.8 கோடியாக இருந்தது. ஆனால் பின்னர் ரூ.7287.2 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிஏஜி சுட்டிக்காட்டியுள்ளது. இதன் மூலம் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
2. இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் உருவாக்கிய எஞ்சினில் வடிவ குளறுபடிகள் இருந்ததால் ரூ.159 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
3. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் ரூ.154 கோடி வரை விதிமுறை மீறல்களுக்காகப் பயணிகளிடம் வசூலிக்கப்பட்டிருக்கிறது எனவும் சிஏஜியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4. பிரமரின் சுகாதாரக் காப்பீடு திட்டத்தில் 7.5 லட்சம் பேர் ஒரு எண்ணில் இணைக்கப்பட்டிருப்பது சிஏஜி அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அதேபோல் பாரத் மாலா திட்டத்தின் ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளது. மேலும் அயோத்தியா மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தியதில் ரூ.8.22 கோடி வீணாக்கப்பட்டுள்ளது என சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இப்படிப் பல திட்டங்களில் முறைகேடுகள் ஏற்பட்டுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
இந்த சிஏஜி அறிக்கையைச் சுட்டிக்காட்டி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசுக்குக் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, "பாஜகவின் ஊழல் மற்றும் கொள்ளை தேசத்தை நரகத்திற்கு அழைத்துச் செல்கிறது" என கடுமையாக விமர்சித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!