India

புகார் பெட்டியில் கிடந்த கடிதம்.. ஆசிரியர் மீது 16 மாணவிகள் பாலியல் புகார்.. அதிர்ச்சிக்குள்ளான ஆசிரியர்!

கேரள மாநிலம் மலப்புரம் அருகே கருளாயி என்ற இடத்தில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாணவர்கள் படிக்கும் இங்கு நவ்ஷார் கான் (Naushar Khan) என்ற ஆசிரியர் மாணவர்களுக்கு பாடம் சொல்லி கொடுக்கிறார். இந்த சூழலில் மாணவர்களுக்கு ஏதேனும் அசெளகரியம் ஏற்படும் எனில், அதனை நேரடியாக தெரிவிக்க பயந்தார் புகார் கடிதம் எழுதி போடலாம் என்ற திட்டத்தோடு அண்மையில் அந்த பள்ளியில் புகார் பெட்டி வைக்கப்பட்டது.

புகார் பெட்டியில் மாணவர்கள் தங்களுக்கு ஏதேனும் பிரச்னை என்றால் அதில் கடிதம் வழியாக எழுதி போடுவர். அதனை ஆசிரியர்கள் படித்து விட்டு அவர்கள் குறைகளை தீர்த்து வைக்க முயற்சி மேற்கொள்வர். அந்த வகையில் சம்பவத்தன்று பள்ளி ஆசிரியர் ஒருவர் புகார் பெட்டியை திறந்து மாணவர்களிடம் கடிதத்தை எடுத்து படித்துள்ளார்.

அப்போது அதில் ஆசிரியர் நவ்ஷார் கான் மீது பாலியல் புகார் இருந்துள்ளது. தொடர்ந்து மற்றவர்களிடம் கடிதம் படிக்கவே, இதே போல் சுமார் 16 மாணவிகள் ஆசிரியர் நவ்ஷார் கான் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தனர். கடந்த மதம் 20-ம் தேதி எழுதப்பட்டிருந்த கடிதத்தை கண்டு ஆசிரியர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளானர். தொடர்ந்து இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மாணவிகள் வல்லப்புழா பகுதியை சேர்ந்த நவ்ஷார் கான் தங்களை பாலியல் தொந்தரவு செய்ததாகவும், தொடந்து தொல்லை கொடுத்ததாகவும் தெரிவித்தனர். இதையடுத்து ஆசிரியர் நவ்ஷார் கான் மீது போலீசார் போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை விசாரிக்க அவரது வீட்டுக்கு சென்றனர்.

ஆனால் ஆசிரியர் அங்கிருந்து தலைமறைவாகிவிட்டார். தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் ஆசிரியர் நவ்ஷார் கானை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். பள்ளி புகார் பெட்டியில் ஆசிரியர் மீது 16 மாணவிகள் பாலியல் புகார் கடிதம் எழுதி போட்டுள்ள சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கோபித்து கொண்டு 150 அடி உயர மின் கோபுரத்தில் ஏறிய காதலி.. சமாதானம் செய்ய பின்னாலே சென்ற காதலன்.. நடந்தது?