India
பள்ளி மாணவி பேக்கில் லவ் லெட்டர், தண்ணீர் பாட்டிலில் சிறுநீர்.. சக மாணவர்கள் செயலால் கொந்தளித்த மக்கள்!
ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா என்ற பகுதியில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. பல்வேறு மாணவர்களும் படிக்கும் இங்கு வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்களும் படித்து வருகின்றனர். aந்த அந்தவகையில் வேறு சமூகத்தை சேர்ந்த மாணவி ஒருவரின் தண்ணீர் பாட்டிலில் சக மாணவர்களே சிறுநீர் நிரப்பி வைத்துள்ள சம்ப்வம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பள்ளியில் படிக்கும் அந்த மாணவி மதிய உணவு சாப்பிட தனது வீட்டுக்கு செல்வது வழக்கம். அந்த வகையில் சம்பவத்தன்றும் மாணவி தனது வீட்டுக்கு உணவு சாப்பிட சென்றுள்ளார். அப்போது தனது பேக்கை வகுப்பறையில் வைத்துவிட்டு சென்றுள்ளார். இதனை கண்ட அவருடன் அதே பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் மாணவியின் பேக்குக்குள் காதல் கடிதத்தை வைத்துள்ளனர்.
மேலும் மாணவியின் தண்ணீர் பாட்டிலில் சிறுநீரை நிரப்பி வைத்துள்ளனர். இவையேதும் தெரியாமல் மாணவி மீண்டும் பள்ளிக்கு வந்து தனது பாட்டிலில் தண்ணீர் குடித்துள்ளார். அப்போது நாற்றம் அடித்துள்ளது. இதனை கண்ட அந்த மாணவர்கள் உடனே மாணவியிடம் நடந்ததை கூறி கேலி செய்துள்ளனர். இதனால் அழுதுகொண்டே பாதிக்கப்பட்ட மாணவி பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகார் கொடுத்துள்ளார்.
ஆனால் அவரோ இதனை சரியாக கண்டுகொள்ளாமல் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து மாணவி தனது குடும்பத்தாரிடம் தெரிவிக்கவே, ஆத்திரம் கொண்ட அவர்கள் சம்மந்தப்பட்ட மாணவர் வீட்டுக்கு கட்டை, காம்புகள் உள்ளிட்டவைகளுடன் சென்று தாக்க முற்பட்டனர். உடனடியாக இதுகுறித்து போலீசாருக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் விரைந்து வந்த அவர்கள் மாணவியின் உறவினர்களை சமாதானப்படுத்த முயன்றனர்.
அப்போதும் கோபத்தில் இருந்த மக்கள், கற்களை போலீசார் மீதும் வீசி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான வீடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தால் ராஜஸ்தானில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?