India
ஓடும் இரயிலில் துப்பாக்கி சூடு : ரயில்வே பாதுகாப்பு வீரர் (RPF) கொடூர செயலால் அதிகாலை 4 பேர் பரிதாப பலி !
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் மும்பை ஜெய்ப்பூர் - மும்பை விரைவு ரயில் ( ரயில் எண் : 12956) சென்று கொண்டிருந்தது. அப்போது அதிகாலை நேரத்தில் இரயில் பால்கர் என்ற இரயில் நிலையம் அருகே வந்தது. அந்த சமயத்தில் திடீரென அந்த இரயிலில் இருந்த RPF என்று சொல்லப்படும் இரயில்வே பாதுகாப்பு படை வீரர் ஒருவர் தனது துப்பாக்கியை எடுத்து சுட தொடங்கியுள்ளார்.
இந்த வீரர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சக RPF வீரர் ஒருவரும் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் அதில் பயணம் செய்த பயணிகள் 3 பேரும் உயிரிழந்தனர். துப்பாக்கி சூடு சத்தத்தை கேட்ட சக பயணிகள் அலறவே தஹிசார் நிலையம் அருகே இரயிலில் இருந்து குதித்து தப்பிக்க முயற்சித்துள்ளார் அந்த RPF வீரர். இந்த நிகழ்வு குறித்து பயணிகள் சக அதிகாரிகளுக்கு தெரிவிக்கவே தப்பிக்க முயன்ற வீரரை கையும் களவுமாக அதிரடியாக கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட அந்த வீரரை போலீசார் பாதுகாப்புடன் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அதிகாலை நடந்த இந்த கோர சம்பவம் குறித்தும், உயிரிழந்த பயணிகள் யார், என்ன, வயது என்பதை குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட RPF வீரர் பெயர் சேத்தன் சிங் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் அதிகாலை சுமார் 5 மணியளவில் நடந்துள்ளது என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பயணிகளிடமும் விசாரித்து வருகின்றனர். அதிகாலை நடந்த இந்த சம்பவத்தால் இரயில் பயணிகளிடம் பெறும் பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இரயில்வே வீரரின் அந்த செயலுக்கு காரணம் குறித்தும் போலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!