India

தொடர்ந்து முடக்கப்படும் இணையம்.. தகவல் பரிமாற்றத்துக்காக சொந்தமாக பத்திரிகை தொடங்கிய குக்கி சமூகத்தினர் !

மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் வெடித்து வன்முறையாக மாறியுள்ளது. இந்த வன்முறையில் மெய்தி சமூகத்தினர், குக்கி பழங்குடியின மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 90 நாட்களுக்கு மேலாக நடைபெற்ற இந்த வன்முறையை பாஜக அரசு கண்டும் காணாததுமாய் இருந்து வந்துள்ளது.இந்த வன்முறையில் 140-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதோடு இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் அடித்து கொலை செய்துள்ளனர்.மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு தற்போதுதான் அங்கு இணையம் வழங்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதனைத் தொடர்ந்து மணிப்பூர் கலவர விவகாரத்தில் பாஜக முதல்வரின் செயலற்ற தன்மை குறித்து விமர்சித்த மணிப்பூர் இளைஞர் போலிஸார் முன்னிலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது செய்தியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அங்கு குக்கி சமூக மக்களுக்கு நிகழ்த்தப்பட்ட கொடுமைகள் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளன.

இந்த நிலையில், மணிப்பூரில் இணையம் முடக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு தகவல் பரிமாற்றத்துக்காக குக்கி சமூக மக்கள் சொந்தமாக செய்தித்தாள் ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.

பெரும்பான்மை சமூகத்துக்கு ஆதரவாக அரசின் ஆதரவோடு நடக்கும், வன்முறையில் காரணமாக தங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு உரிய தகவல் சென்றுசேரவேண்டும் என, குக்கி சமூகத்தை சேர்ந்த சில தன்னார்வலர்கள் Zalen Awgin என்ற பெயரில் செய்தித்தாள் ஒன்றைத் தொடங்கியுள்ளனர்.

புரட்சியின் குரல் என்ற அர்த்தத்தில் அழைக்கப்படும் இந்த செய்திதாள் மூலம் தங்கள் சமூகத்தினர் வசிக்கும் கிராமங்களுக்கு செய்திகளை அளிக்கும் விதமாக இது தொடங்கப்பட்டுள்ளது என்றும், விரைவில் அனைத்து கிராமங்களுக்கும் இந்த செய்தித்தாள் சென்றடையும் என்றும் இந்த செய்தித்தாளை தொடங்கியவர்கள் கூறியுள்ளனர்.

Also Read: அமெரிக்கா சென்று பொய் பேசிய பிரதமர் மோடி.. அம்பலப்படுத்திய ஒன்றிய கல்வி அமைச்சர்.. அது என்ன?