India
கை பட்டதால் தலித் மீது மலம் பூசப்பட்ட கொடூரம்.. சிறுநீர் சம்பவத்தைத் தொடர்ந்து ம.பியில் அடுத்த அதிர்ச்சி!
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதலமைச்சராக சிவராஜ் சிங்க சவுகான் உள்ளார். இந்த மாநிலத்தில் பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர், இஸ்லாமியர்கள், பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 3 மாதங்களுக்கு முன்னர் மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகி ஒருவர் மதுபோதையில் சிறுநீர் கழித்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ சமீபத்தில் வைரலான நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவரை விடுதலை செய்யவேண்டும் என பிராமண சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுனர்.
அதன்பின்னர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞரின் காதில் ஒருவர் சிறுநீர் கழித்துள்ள வீடியோ வெளியாகி சர்ச்சையை பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தற்போது தலித் இளைஞர் ஒருவரின் முகத்தின் மீது ஆதிக்க சமூகத்தை சேர்ந்த ஒருவர் மலத்தை பூசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தின் சத்தர்பூர் கிராமத்தில் தேஷ்ராஜ் என்ற தலித் இளைஞர் கட்டுமானதொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர் வேலைசெய்துகொண்டிருந்த போது அங்கிருந்த ஆதிக்க சமூகத்தை சேர்ந்த ராம்கிரிபால் பட்டேல் என்பவரின் மீது கையில் இருந்த கிரீஷை விளையாட்டாக பூசியதாக சொல்லப்படுகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த ராம்கிரிபால் பட்டேல் தேஷ்ராஜுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டுள்ளார். அப்போது தலித் இளைஞர் தேஜ்ராஜ் வாயில் அங்கிருந்த மலத்தை போட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அங்குள்ள பஞ்சாயத்தில் முறையிட்டபோது பாதிக்கப்பட்ட தேஜ்ராஜ்க்கு 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் கடும் அதிருப்தி அடைந்த தேஜ்ராஜ் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மாநிலத்தில் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!