India
கசிந்த மாணவிகளின் அந்தரங்க வீடியோ.. சக மாணவிகளே ஆண் நண்பர்களுக்கு அனுப்பிய கொடூரம் ! - காரணம் என்ன ?
கர்நாடக மாநிலம் உடுப்பியில் நேத்ரா ஜோதி என்ற பெயரில் தனியார் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. கண்கள் தொடர்பான மருத்துவ கல்லூரியாக இங்கு மாணவர்கள் பலரும் பயின்று வருகின்றனர். அந்த வகையில் BSc Optometry என்ற படிப்பை படிக்கும் மாணவிகளின் Rest Room-ஐ பயன்படுத்துவது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இதனை கண்ட மாணவி ஒருவர் இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் விசாரிக்கையில், அதே வகுப்பை சேர்ந்த 3 மாணவிகள் இந்த விவகாரத்தில் சிக்கியுள்ளனர் மேலும் அவர்கள் Rest Room-ல் தங்கள் மொபைல் போன்களை வைத்து விட்டு, அங்கு வரும் பெண்களின் வீடியோக்களை ரெக்கார்ட் செய்து அதனை தங்கள் ஆண் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர்.
தொடர்ந்து அவர்களிடம் விசாரிக்கையில், இதனை வேறு சில பெண்களை பழி வாங்கும் நோக்கில் பல நாள்களாக Rest Room-ல் மொபைல் வைத்து வீடியோ எடுத்து வெளியிட்டு வந்ததும், இதில் புகார் கொடுத்த பெண்ணின் வீடியோ தெரியாமல் பதிவானதாகவும் விளக்கம் அளித்தனர். இது போல் பல நாட்கள் இந்த மாணவிகள் செய்து வந்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த பெண்ணின் வீடியோவை மட்டும் அவர் முன் டெலிட் செய்துள்ளனர் அந்த மாணவிகள்.
இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட 3 மாணவிகள் குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள், கல்லூரி நிர்வாகம் உள்ளிட்டோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். மேலும் அந்த 3 மாணவிகளை கல்லூரியில் இருந்து, நிர்வாகம் சஸ்பெண்ட் செய்துள்ளது. தொடர்ந்து அவரது மொபைல் போன்களை மீட்டு சைபர் க்ரைம் போலீஸாரிடம் கல்லூரி நிர்வாகமே ஒப்படைத்துள்ளது. தற்போது அந்த பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சக மாணவிகளை பழி வாங்கும் நோக்கில், அவர்கள் Rest Room பயன்படுத்தும் வீடியோக்களை பதிவு செய்து தங்கள் ஆண் நண்பர்களுக்கு பகிர்ந்து வந்த 3 கல்லூரி மாணவிகளின் செயல் கர்நாடகாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்