India

‘டேய்.. பாட்ட போட்றா..’ : பப்பில் ரகளை செய்த பெண்கள்.. தாக்கிய பவுன்சர்கள்.. நடந்தது என்ன ?

தற்போதுள்ள காலகட்டத்தில் வேலை முடிந்து வார இறுதியில் ரிலாக்ஸ் ஆக சில பேர் பார்ட்டிகளுக்கு செல்வர். அதுமட்டுமின்றி, பிறந்தநாள் உட்பட சில கொண்டாட்டங்களுக்கு பார்ட்டி செய்வர். இதுபோன்ற பார்ட்டிகள் பப், கிளப் உள்ளிட்டவைகளில் சில பேர் கொண்டாடுகின்றனர். இதுபோன்ற பார்ட்டிகளில் ஆண்கள், பெண்கள் என பலரும் கலந்து கொள்வர்.

அவ்வாறு கலந்துகொள்ளும் சில நேரங்களில் தகராறு பிரச்னை உள்ளிட்டவைகளில் முடிகிறது. அந்த வகையில் தற்போதும் ஒரு சம்பவ நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் காசியபாத்தில் அமைந்திருக்கும் பப் ஒன்றுக்கு இளம்பெண் ஒருவர் தனது 2 தோழிகளுடன் வந்துள்ளார். அப்போது அனைவரும் ஜாலியாக தங்கள் மகிழ்ச்சியை கொண்டாடினர்.

அந்த சமயத்தில் தங்களுக்கு பிடித்த பாடல் போட வேண்டும் என்றால் ஒரு பாடலுக்கு 500 என்று அங்குள்ள டிஜே (DJ) கூறியுள்ளார். எனவே இவர்களும் 3 பாடல்கள் போட வேண்டும் என்று ரூ.1500 கொடுத்துள்ளனர். ஆனால் பணம் செலுத்திய பிறகும் DJ, அந்த பெண்கள் கேட்ட பாடல்களை போட மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அந்த பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த வாக்குவாதம் முற்றவே, அங்கிருந்த ஊழியர்கள், பவுன்சர்கள் என அனைவரும் வந்து அவர்களை வெளியேற்ற முயன்றனர். ஆனால் வெளியேற மறுத்ததால் கட்டை, கம்பி உள்ளிட்டவையை எடுத்து வந்து தாக்க தொடங்கியுள்ளனர். இதில் ஒரு பெண் அவரது சகோதரனுக்கு உடனே தகவல் தெரிவிக்க, அவரும் அங்கு வந்து அவர்களை பாதுகாக்க முயன்றார்.

ஆனால் பாதுகாக்க வந்த சகோதரனையும் அந்த பவுன்சர்கள் கடுமையாக தாக்கினர். தொடர்ந்து இந்த தாக்குதலில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டதோடு, அந்த பெண்களின் உடைகளும் கிழிக்கப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் தகவல் கொடுக்கப்பட்ட அரை மணி நேரத்திற்கு பிறகு சம்பவ இடத்திற்கு போலீசார் வந்தனர். இதனிடையே போலீசார் வருவதை கண்ட பவுன்சர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்டவர்கள் நடந்ததை தெரிவித்து புகார் அளித்தனர். அதிகாலை 4 மணியளவில் நடந்த இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் குற்றம்சாட்டப்பட்டவர்களை தீவிரமாக தேடி வருகின்றனர். தொடர்ந்து படுகாயமடைந்த சகோதரரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கே அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவரது கை முறிந்தது தெரியவந்தது.

தொடர்ந்து சொகத்தரனுக்கு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதிகாலை 4 மணியளவில் நடந்த இந்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: திடீரென ஒத்திவைக்கப்பட்ட சமந்தா படம்.. எப்போது வெளியாகும் ? - படக்குழு கூறுவது என்ன ?