India
ம.பி.யைத் தொடர்ந்து உ.பி: பட்டியலின இளைஞர் காதில் சிறுநீர் கழித்து கொடுமை.. பாஜக ஆளும் மாநிலத்தில் சோகம்
மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதலமைச்சராக சிவராஜ் சிங்க சவுகான் உள்ளார். இந்த மாநிலத்தில் பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர், இஸ்லாமியர்கள், பழங்குடியின மக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 3 மாதங்களுக்கு முன்னர் மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது பாஜக நிர்வாகி ஒருவர் மதுபோதையில் சிறுநீர் கழித்த சம்பவம் நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த வீடியோ சமீபத்தில் வைரலான நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனால், அவரை விடுதலை செய்யவேண்டும் என பிராமண சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது பாஜக ஆளும் உத்தரபிரதேசத்தில், பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞரின் காதில் ஒருவர் சிறுநீர் கழித்துள்ள வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா அருகில் பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவரும், மாற்றுச் சமூகத்தைச் சேர்ந்த ஜவஹர் படேல் என்பவரும் தெரிந்தவர்களாக இருந்ததாக சொல்லப்படுகிறது.
இவர்களுக்குள் கடந்த ஜூலை 11-ம் தேதி மதுபோதையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ஜவஹர் படேல் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞரை தாக்கியுள்ளார். இதில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த இளைஞர் சுயநினைவற்று கீழே விழுந்துள்ளார். அப்போதும் ஆத்திரம் தீராத ஜவஹர் படேல், அவரை பழிவாங்கும் விதமாக பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞரின் காதில் சிறுநீர் கழித்துள்ளார்.
இதனை அங்குள்ள ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட அது இணையதளத்தில் வேகமாக பரவியுள்ளது. இந்த சிறுநீர் களித்த வீடியோ அடுத்த நாள் அந்த பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இளைஞருக்கும் செல்ல, அவர் இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்படி வழக்கு பதிவு செய்த போலிஸார், ஜவஹர் படேல் மற்றும் அவரது நண்பர் ஒருவரை கைது செய்தனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!